"உதயநிதியிடம் ஒரு ரகசியம் இருக்கு".. 1st time உதய் பற்றி இவ்ளோ பேசிருக்காரு EPS!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை, 11, பிப்ரவரி 2022: பிரபல நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததுடன், நடிகர் உதயநிதி தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி நடை போடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் உதயநிதி பற்றி மதுரையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய விஷயங்கள் வைரலாகி வருகின்றன. அதிமுக சார்பில் முன்னாள் முதல்வராக எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்திருந்தனர். கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்து இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய போது வழக்கத்துக்கு மாறாக உதயநிதி பற்றி அதிகம் பேசியிருக்கிறார்.
Also Read: 'கடைக்கு வந்த திடீர் சோதனை'.. வீதியில் அமர்ந்த மொத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பம்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எப்போதுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் மாறி மாறி ஒருவர் கருத்துக்கு ஒருவர் பதில் கூறி வருவது வழக்கம் என்றாலும் கூட, இந்த முறை ஒவ்வொரு முறை முதல்வர் முக.ஸ்டாலின் பெயரை குறிப்பிடும் பொழுதும், உதயநிதி ஸ்டாலினின் பெயரையும் சேர்த்தே குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
நீட் விவகாரம்..
குறிப்பாக 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. அப்போது மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் நீட் தேர்வை கொண்டு வந்ததாகவும், அந்த நேரத்தில் திமுகவை சேர்ந்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வன் உள்ளிட்டோர் இருந்தாகவும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கொண்டுவந்ததாகவும், அதை மு.க.ஸ்டாலினே ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு ரகசியம் இருக்கிறது...
னினும் அதன் பின்னர் பிரச்சாரங்களில் பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வை ரத்து செய்வதற்கு என் தந்தையிடம் ஒரு ரகசியம் இருக்கிறது!” என்று கூறியிருந்தர். அவர் தங்களிடம் இருக்கும் அந்த ரகசியம் என்ன என்று தெரிவித்து, அந்த வழி முறையை அமல்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சவாலை ஏற்க தயார்..
இதேபோல், “நீட் தேர்வு குறித்த நேருக்கு நேர் விவாதத்துக்கு தயாரா?” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தம்மிடம் கேட்டு இருந்ததாகவும், அதற்கு தான் தயார் என்றும், அந்த சவாலை தான் ஏற்பதாகவும் எடப்பாடிபழனிசாமி குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் பற்றி அதிகம் பேசியது கவனிக்க பெற்றிருக்கிறது.
நெஞ்சுக்கு நீதி டீசர்
அரசியல் பணிகளிலும் முழு வீச்சுடன் ஈடுபட்டு வரும் அதே சமயம், நடிப்பிலும் இளம் நடிகர் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி உதயநிதி நடிப்பிலான, ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அந்த டீசரில் ‘நடுநிலைமை என்பது நியாயத்தின் பக்கம் நிற்பது தான்!’ என உதயநிதி பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: "முதல்வருக்கு சிரஞ்சீவி நன்றி" .. "மறக்க முடியாது" - நெகிழும் மகேஷ் பாபு.. உடன் ராஜமௌலி..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
- பார்லிமென்ட்டில் தமிழ்நாடு பற்றிய பேச்சுக்கு முதல்வர் நெகிழ்ச்சி .. பதிலுக்கு ராகுல் காந்தி போட்ட வைரல் ட்வீட்
- Rahul Gandhi: "வாழ்நாள் முழுசும் தமிழ்நாட்ட உங்களால ஆள முடியாது!".. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை வீச்சு!
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்.. எத்தனை கோடி தெரியுமா? - அமலாக்கத்துறை அதிரடி
- "உங்களுக்கு சால்வை'ய போடணும்.." சென்னையில் கட்சி அலுவலகம் அருகே நின்ற திமுக வட்ட செயலாளர்.. தனியாக அழைத்து நடந்த கொடூரம்
- நான் இங்கே விருந்துக்கு வரலை' - ஆவேசப்பட்ட ஜோதிமணி.. செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம் என்ன?
- 'வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி?' - திருமாவளவனுக்கு வந்த கோபம்.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை!
- நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு
- பள்ளிகள் திறப்பு.. தமிழகத்தில் பிப்ரவரி 1 முதல் மிகப்பெரிய லாக்டவுன் தளர்வுகள்.. என்னென்ன? விவரம்
- வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு குட்நியூஸ்