"கோவை மக்கள் குசும்பு புடிச்சவங்க".. "பேசுனத வாபஸ் வாங்கிக்கிறேன்.." மேடையில் உதயநிதி கலகலப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மக்களை பற்றி தான் பேசியதை தற்போது வாபஸ் வாங்கிக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று கோவையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சென்னை, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞர் அணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குசும்பு
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "தேர்தல் சுற்றுப் பயணத்தின்போது கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டேன். அப்போது கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற மாட்டார்கள் என சொல்லியிருந்தேன். ஆனால் நடைபெற்று முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு பிரம்மாண்ட வெற்றியை இந்த மக்கள் பெற்றுத் தந்துள்ளனர். ஆகவே கோவை மக்கள் குறித்து நான் பேசியதை இப்போது வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மகளிருக்கு தையல் மெஷின் உள்ளிட்ட பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நன்றி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் திமுக பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது. இதனை சாத்தியமாக்க கடுமையாக உழைத்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார் அப்போது, "தலைவர் கூறியதைப்போல 100% அல்ல 1000% செய்து காட்டுவேன் என அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்திருந்தார். அதேபோல செய்து காட்டியுள்ளார். இது அவருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல முதல்வரின் எட்டு மாத கால சிறப்பான ஆட்சிக்கு கிடைத்த வெற்றி" என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக பட்ஜெட்டில் கோவையில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததையும் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவையில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 96ல் திமுக வெற்றி பெற்றிருந்தது. அதைப்போலவே, 7 நகராட்சியையும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் மோகம்.. தப்பான ரூட்டில் போன முன்னாள் மிஸ்டர் இந்தியா.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கோவை: யூபிஎஸ் பேட்டரி வெடித்து வெளிவந்த புகை.. அணைக்க முயன்ற அம்மா, மகளுக்கு நேர்ந்த சோகம்..!
- தடுப்புச் சுவரில் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே பலியான திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் மகன்..விசாரணையில் போலீஸ்..!
- "இந்திய ராணுவத்தில் இடம் கிடைக்கல.." உக்ரைனில் பயின்று வந்த தமிழக மாணவர்.. பெற்றோருக்கு தெரிய வந்த தகவலால் அதிர்ச்சி
- "எங்களை காப்பாத்துங்க.." சாலையில் கேட்ட இளம் காதல் ஜோடியின் அலறல் சத்தம்.. ரவுண்டு கட்டிய வாகன ஓட்டிகள்..
- சட்டமன்ற தேர்தலில் விட்டதை.. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தட்டித் தூக்கிய திமுக.. தொண்டர்கள் உற்சாகம்..!
- சென்னை முதல் நாகர்கோவில் வரை.. மொத்தமாக மாநகராட்சிகளை தூக்கும் திமுக? ஸ்டாலினுக்கு கிடைத்த பெரும் வெற்றி
- 328 பேரூராட்சிகளில் திமுக வெற்றி.. அதிமுக பிடித்த இடங்கள் எத்தனை?.. கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்கள்!
- வெற்றி பெற்றதும் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
- தேர்தல் முடிவுகள் : 22 வயசு தான்.. ஜெயிச்சு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பெண் .. யாருப்பா இவங்க?
- எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!