'கையில் எடுத்த ஒற்றை செங்கல்'... 'உதயநிதி ஸ்டாலின் மெகா வெற்றி'... போட்டியிட்ட முதல் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அமோக வெற்றியை பெற்றுள்ளார்.

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக ஆட்சி அமைக்க போவது உறுதி ஆகிவிட்டது.

பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். தொகுதி அறிவிப்பு வெளியானபோதே வெற்றி வாய்ப்பு உதயநிதிக்கு சாதகமாக இருக்கும் என்ன கூறப்பட்டது. இதற்கிடையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியபோதே முன்னிலையில் இருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதன் பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட போது அனைத்து சுற்றுகளின் எண்ணிக்கையிலும் உதயநிதி முன்னிலையே வகித்தார். இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸாலியை சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அவர் கையில் எடுத்த செங்கல் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.

இது தேர்தல் பிரச்சாரத்திலும் கடுமையாக எதிரொலித்தது. தற்போது தனது தாத்தா கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான தொகுதியான சேப்பாக்கம் தொகுதியில் தனது அரசியல் வெற்றிக் கணக்கை உதயநிதி தொடங்கியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்