#Breaking: ஆளுநர் ஒப்பதல்.. அமைச்சராக பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின்.? வெளியான பரபரப்பு தகவல்கள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞரணி செயலாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "பயத்தையும் பிரச்சனைகளையும் இப்படி டீல் பண்ணுங்க".. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த சூப்பர் வீடியோ.. !

தமிழக முதல்வர் முக.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அண்மையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளராக அவர் தேர்வு மீண்டும் தேர்வு செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்திருந்தார். இதனிடையே, அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிட முதல்வர் முக.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்ததாகவும் இதுகுறித்து ஆளுநருர் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, வரும் 14 ஆம் தேதி ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் காலை 9.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே, தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான பிரத்யேக கட்டிடத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும் அறை ஒதுக்கப்படும் வேலைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவருக்கு என்ன துறை வழங்கப்படும் என பொதுமக்கள் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சரவை பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், அமைச்சரவையில் இதுவரை பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "கடவுளின் பரிசு".. அப்பாவான மயங்க் அகர்வால் பகிர்ந்த புகைப்படம்.. விராட் கோலி போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்..!

MKSTALIN, UDHAYANIDHI STALIN, TN MINISTER, CM MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்