சட்டசபைல சட்டுன்னு எந்திரிச்சு உதயநிதி வச்ச கோரிக்கை.. கவனமா கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. ஓ. இது நல்ல ஐடியாவா இருக்கே.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
சட்டசபை
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மே 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ள மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தற்போது சூடு பிடித்துள்ளன. இதனிடையே இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. நேற்று சமூக நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திருநங்கையர் நலன் குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய உதயநிதி," 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உதவி தொகை அனைத்து திருநங்கைகளுக்கும் வழங்கப்படவேண்டும். திருநங்கைகள் அனைவரும் ஆதரவற்றவர்கள் எனக் கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.
மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அப்போது பேசிய உதயநிதி,"ஒருவர் திருநங்கை அல்லது திருநம்பி என்று அறிந்து அதை வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுவிடுகிறார்கள். இப்படி பலர் ஆதரவற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆகவே 18 வயது நிரம்பிய திருநங்கையர் அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க வழி செய்யவேண்டும்" என பேசியிருந்தார்.
கவுன்சிலிங்
திருநங்கைகளாக பள்ளிப் பருவத்தில் உணரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக கவுன்சிலிங் உதவிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் "திருநங்கைகளாக உணரக்கூடியவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பள்ளியிலேயே கவுன்சிலிங் வழங்கப்படும்" என அறிவித்தார்.
திருநங்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார். சட்டசபையில் திடீரென எழுந்து கேள்வியெழுப்பியது குறித்து பலரும் தற்போது வைரலாக பேசிக்கொண்டுள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மோடி அரசை விமர்சித்த திமுக எம்எல்ஏ.. உடனே அவை குறிப்பில் இருந்து நீக்கிய தமிழக சபாநாயகர்
- ‘முதல் தேர்தலே மாபெரும் வெற்றி’!.. அப்போ அமைச்சரவையில் உங்களுக்கு இடம் உண்டா..? செய்தியாளர்கள் கேள்விக்கு ‘உதயநிதி’ பதில்..!
- ‘உடைஞ்சு போயிருக்கும் திரைத்துறைக்கு ஆக்சிஜன் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்’!.. உதயநிதி ஸ்டாலினுக்கு ‘பிரபல’ நடிகர் வாழ்த்து..!
- ‘அடேங்கப்பா..!’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா..! ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..!
- ‘கர்ணன் பார்த்தேன்’!.. ‘அந்த தவறை 2 நாட்களில் சரி செய்றோம்னு சொல்லிருங்காங்க’.. உதயநிதி பரபரப்பு ட்வீட்..!
- ‘நான் பேசுன ரெண்டு வரியை வச்சு மட்டுமே புகார் கொடுத்திருக்காங்க’!.. தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு ‘உதயநிதி’ கொடுத்த விளக்கம் என்ன..?
- ‘அப்பாவை விட அதிகம்’!.. உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வேட்புமனுவில் வெளியான தகவல்..!
- ‘தம்பி எவ்வளவு செலவு செய்வ?’.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்.. நேர்காணலில் நடந்த சுவாரஸ்யம்..!
- ‘விருப்ப மனு தாக்கல்’!.. உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பும் ‘தொகுதி’ இதுதான்.. பரபரக்கும் அரசியல் களம்..!
- Video: 'ஒரு பக்கம் பிடித்து இழுத்து வெளியேற்றம்'.. 'இன்னொரு பக்கம் அமரவைக்க முயற்சி!'.. துணை சபாநாயகருக்கு நடந்தது என்ன?.. ‘அமளி துமளி’ சம்பவம்!.. பரவும் வீடியோ!