மதுரையில் நடிகர் சூரியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவை கண்டுகளித்த அமைச்சர் உதயநிதி.!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வந்தாலே நினைவுக்கு வரக்கூடிய கூடுதல் விஷயம் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.

Advertising
>
Advertising

Also Read | "இப்டி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது".. விமானியாக இருந்து விபத்தில் உயிரிழந்த கணவர்.. அதே மாதிரி 16 வருஷம் கழிச்சு உயிரிழந்த பெண் விமானி!!

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கக்கூடிய இந்த கலாச்சார நிகழ்வு வருடா வருடம் நடைபெறுகிறது. இந்த முறை பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து இந்த போட்டியை கண்டு களித்தார்.

இந்த போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த வீரர்களுக்கு முதலமைச்சர் சார்பில் காரும் சிறந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே வெற்றி பெற்ற வீரர்களுக்கு மோதிரமும் பரிசளிக்கப்பட்டது. இந்தநிலையில்தான் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்வை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

அவருடன் இந்த நிகழ்வில் அன்பில் மகேஷ், நடிகர் சூரி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இணைந்து இந்த போட்டியை கண்டு களித்தனர். சுமார் 1000 காளைகள் பங்குபெறும் இந்த போட்டியில், 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குகின்றனர், 7 மருத்துவக் குழுக்கள், 20 மருத்துவர்கள் 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Also Read | “உதயநிதியும் எம் புள்ள தான்”.. மதுரையில் பெரியப்பா எம்.கே.அழகிரியை சந்தித்த அமைச்சர் உதயநிதி.!!

UDHAYANIDHI STALIN, MK AZHAGIRI, UDHAYANIDHI AZHAGIRI MEET SOORI, ALANGANALLUR, JALLIKATTU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்