‘விருப்ப மனு தாக்கல்’!.. உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விரும்பும் ‘தொகுதி’ இதுதான்.. பரபரக்கும் அரசியல் களம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள தொகுதி குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிக்கான விருப்ப மனு விநியோகத்தை கடந்த 17ம் தேதி திமுக தொடங்கியது.
இதில் திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நேற்றுமுன்தினம் 24-ம் தேதி வரை விருப்ப மனுக்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். தற்போது இந்த மனுக்களை பூர்த்தி செய்து திமுகவினர் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தனது விருப்பமனுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பரிசீலனை செய்து வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’!.. முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ன..? விருப்ப மனு தாக்கல்..!
- 'தம்பி, உன் போனை கொடு'... 'டேய், தம்பி மொபைல் பாஸ்வேர்ட் என்ன டா'... 'பிரச்சாரத்தின் போது நடந்த சுவாரசியம்'... வைரலாகும் வீடியோ!
- 'பரபரப்பாகும் அரசியல் களம்'... 'பிப்ரவரி 15க்குப் பிறகு தேர்தல் தேதி'?... வெளியான முக்கிய தகவல்!
- 'வண்டிய நிறுத்துங்க!.. குழந்தைங்க ஏதோ லெட்டர் கொண்டு வர்றாங்க'!.. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில்... குழந்தைகளின் குறும்பு வேலை!.. வைரல் சம்பவம்!
- ‘கையில் துப்பாக்கியுடன் நின்ற நபர்’!.. முதல்வர் பரப்புரை சென்ற பகுதியில் நடந்த அதிர்ச்சி.!
- "நானும் ஒரு விவசாயி... அதனால தான் விவசாயிகள் பயிர்க்கடன ரத்து செஞ்சேன்!".. தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் அதிரடி!.. மக்கள் ஆரவாரம்!
- வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு யாருக்கு? - வெளியான பரபரப்பு தகவல்.
- Video: ‘Honda ஆக்டிவா.. மாதம் ஒரு முறை Mutton பிரியாணி.. பட்டு வேட்டி சேலை’ - இது ‘வேறமாரி’ தேர்தல்!
- ‘உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள்’!.. எம்ஜிஆர் சொன்ன ஒரு அறிவுரை.. பழைய போட்டோவை காட்டி நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!
- ‘சிறையிலிருந்து விடுதலை ஆன சசிகலா’!.. ஆனாலும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.. காரணம் என்ன..?