'இதெல்லாம் யாரும் செய்வாங்களான்னு தெரியல'... 'சேப்பாக்கம் தொகுதியில் நடந்த சம்பவம்'... நெகிழ்ந்துபோய் உதயநிதியை பாராட்டிய நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

களத்தில் இறங்கி உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தடுப்பூசி போடுவது மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது தொகுதிக்கு உட்பட இடங்களில் பம்பரமாகச் சுழன்று பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஏராளமான குப்பைகள் சூழ்ந்திருந்த நிலையில் அதனை அகற்ற உத்தரவிட அவர், அங்கு நடைபெற்ற குப்பை அகற்றும் பணி உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து நான்காவது நாளாக உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அதோடு கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ள நிலையில், எல்லா பகுதிக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்பதுடன், தடுப்பூசி ஒன்றே கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்க ஒரே வழி என்று பொதுமக்களிடம் வீடு வீடாக எடுத்துக்கூறி விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். வெகு இயல்பாக மக்களிடம் பேசி, அவர் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.

உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியில் குடிசை மாற்றுக் குடியிருப்புகள், குடிசைப்பகுதிகள் தான் அதிகம். இதனால் மக்கள் நெருக்கமாக வசித்து வரும் நிலையில், அந்த பகுதியில் முறையான சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக என்பதை ஆய்வு செய்தார். தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுச் சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதை எடுத்துக் கூறி அந்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது அங்குச் சிதிலமடைந்த நிலையிலிருந்த பொதுக் கழிப்பிடத்தைச் சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறினார்கள். அதை நேரில் சென்று பார்த்த உதயநிதி ஸ்டாலின், அங்கேயே மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து, அந்த கழிப்பிடத்தை உடனே சீரமைத்துத் தருமாறு வலியுறுத்தினார். இதற்கிடையே பொதுமக்களே போக அஞ்சும் மோசமான நிலையிலிருந்த கழிவறையை ஆய்வு செய்து சரி செய்ய உடனே உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிடச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் உதயநிதி ஒரு சட்டமன்ற உறுப்பினராகத் தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார். மக்களோடு மக்களாக நின்று அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்வது நிச்சயம் பாராட்டுக்குரியது என தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்