VIDEO: மனிதக்கழிவுகளை அகற்றும் இயந்திரம்!.. சேப்பாக்கம் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்த உதயநிதி ஸ்டாலின்!.. பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயந்திரத்தை கொண்டு மனிதக்கழிவை அகற்றும் முறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை 1993-ம் ஆண்டு தடை செய்யப்பட்டதுடன், 2013-ல் இந்த தடை சட்டமாக இயற்றப்பட்டு பல திருத்தங்களுடன் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளும் இச்சட்டத்தை பின்பற்றி சாக்கடை அள்ளும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடை செய்வதுடன், அப்பணியில் இருக்கும் தொழிலாளர்களின் வாழ்வை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. எனினும், கூலி ஆட்களை வைத்து கழிவு சாக்கடையை சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமது தொகுதியில் இயந்திரத்தை கொண்டு கழிவை அகற்றும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் இயந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்" என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'முதல்வர் ஸ்டாலினுடன் டெல்லி சென்ற மனைவி துர்கா ஸ்டாலின்'... 'கவனம் பெற்ற பயணம்'... பின்னணியில் இருக்கும் காரணம்!
- 'கோரிக்கை மனுவோடு இருந்த 2 பவுன் தங்க சங்கிலி'... 'நெகிழ்ந்துபோன முதல்வர் ஸ்டாலின்'... பொறியியல் மாணவிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
- 'அம்மா, முதல்வர் கிட்ட பேசிட்டாங்க'... 'அண்ணே கையெழுத்து போடுறாரு பாருங்க'... 'கான்வாயை நிறுத்திய முதல்வர்'... இணையத்தை கலக்கும் வீடியோ!
- திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!
- 'இதெல்லாம் யாரும் செய்வாங்களான்னு தெரியல'... 'சேப்பாக்கம் தொகுதியில் நடந்த சம்பவம்'... நெகிழ்ந்துபோய் உதயநிதியை பாராட்டிய நெட்டிசன்கள்!
- 'திருமணமான கையேடு புதுமண தம்பதி செய்த நெகிழ்ச்சி செயல்'... 'இதுக்கு பெரிய மனசு வேணும்'... குவியும் பாராட்டு!
- 'எவ்வளவு சொன்னாலும் மக்கள் கேட்கலியே'... 'முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை'... கடுமையாகும் ஊரடங்கு!
- 'முதல்வர் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இல்லம் மாற போகிறதா?... 'புதிதாக குடியேற போகும் இல்லம்'... பின்னணி தகவல்கள்!
- 'உயிர் நண்பனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்'... நெகிழ்ந்துபோன உதயநிதி ஸ்டாலின்!
- 'சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா'... 'முதல்வர் ஸ்டாலின் இத செய்வாருன்னு யாரும் நினைக்கல'... நெகிழ்ந்து போன எம்.எல்.ஏக்கள்!