ஜல்லிக்கட்டு.. சசிகலா அண்ணன் மகனின் காளையை அடக்கிய வீரருக்கு.. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூப்பர் பரிசு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அவனியாபுரம் : ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்று வந்த நிலையில், மாடுபிடி வீரருக்கு ஸ்பெஷல் பரிசு ஒன்றை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, மதுரையில் பொங்கல் பண்டிகை தினத்தன்று தொடங்கி, பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும். இதில், பொங்கல் தினமான இன்று, மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்துள்ள மாநில அரசு, கொரோனா தொற்று பரவல் காரணமாக, சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

கட்டுப்பாடுகளுடன் நடந்த ஜல்லிக்கட்டு

150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 300 மாடுபிடி வீரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதே போல, இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள் அனைவரும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளும் இருந்தன. மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவரின் அடிப்படையில் தான், முன்னுரிமை அளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர்.

சீறிப் பாய்ந்த காளைகள்

பொங்கல் திருநாளான இன்று, தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், இன்று காலை முதலே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக ஆரம்பமானது. தமிழக அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டு, இந்த போட்டியைத் தொடங்கி வைத்தனர். மிக வேகமாக சீறிப் பாய்ந்த காளைகளை, பல வீரர்கள் சாதுரியமாக அடக்கினர்.

கார் பரிசு

மாலை சுமார் 5 மணியுடன், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்றன. இதில், 24 காளைகளை அடக்கி கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார். அவருக்கு, தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய முருகன் இரண்டாம் இடமும், 12 காளைகளை அடக்கிய பரத் குமார் 3 ஆம் இடமும் பெற்றனர்.

அரசியல் சுவாரஸ்யம்

அதே போல, வீரர்களை எதிர்கொண்ட சிறந்த காளைகளும் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதனிடையே, இந்த ஜல்லிக்கட்டுக்கு மத்தியில், அரசியல் தொடர்பான சுவாரஸ்ய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பரிசு

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காளை பிடி வீரர் ஒருவருக்கு, ஒரு பவுன் மோதிரம் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். இந்த பரிசு எந்த காளையை அடக்கியவர் என்பதில் தான் சுவாரஸ்யம் உள்ளது.

அதாவது, சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவியின் சி.இ.ஓ வும் ஆன விவேக் ஜெயராமன் என்பவரின் காளையை அடக்கிய நபருக்கு தான், மோதிரத்தினை சிறப்பு பரிசாக உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ளார்.




இது தொடர்பான செய்திகள், தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும், பொது மக்களும் இது பற்றி, தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

UDAYANIDHI STALIN, SASIKALA, AVANIYAPURAM, JALLIKATTU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்