Jallikattu : முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வழங்கிய கார் பரிசு வென்ற ஜல்லிக்கட்டு வீரர்கள்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வந்தாலே நினைவுக்கு வரக்கூடிய கூடுதல் விஷயம் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.

Advertising
>
Advertising

வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கக்கூடிய இந்த கலாச்சார நிகழ்வு வருடா வருடம் நடைபெறுகிறது. இந்த முறை பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்து இந்த போட்டியை கண்டு களித்தார்.

இந்த போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சிறந்த வீரர்களுக்கு முதலமைச்சர் சார்பில் காரும் சிறந்த காளைகளுக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன. இதனிடையே வெற்றி பெற்ற வீரர்களுக்கு மோதிரமும் பரிசளிக்கப்பட்டது. இந்தநிலையில்தான் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்வை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

அவருடன் இந்த நிகழ்வில் அன்பில் மகேஷ், நடிகர் சூரி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இணைந்து இந்த போட்டியை கண்டு களித்தனர். சுமார் 1000 காளைகள் பங்குபெறும் இந்த போட்டியில், 300 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்குகின்றனர், 7 மருத்துவக் குழுக்கள், 20 மருத்துவர்கள் 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதல்வரின் காரை பரிசாக பெற்ற வீரர் அபி சித்தர்

10 சுற்றுகளாக மாலை 5 மணி வரை நடந்த இப்போட்டியில் சுமார் 823 காளைகள் இடம்பெற்றன. இதில், அபி சித்தர் என்கிற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றதை அடுத்து, அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது காளை தான், இந்த ஜல்லிக்கட்டு பொட்டியில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு (அவரது காளைக்காக)அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கார் பரிசாக வழங்கப்பட்டது.

தவிர, 20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் என்பவர் இரண்டாம் இடத்தையும், 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் என்பவர் மூன்றம் இடத்தையும் பெற்று பரிசுகளைவ் வென்றனர்.

ஜல்லிக்கட்டு, காளை, மாடுபிடி வீரர், பரிசு, முதலாம் இடம், தமிழகம், தமிழ்நாடு, வாடிவாசல், மதுரை, அலங்காநல்லூர், அவனியாபுரம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்