'நைசா வேற ரூட்ல கூட்டிட்டு போயிட்டு'... 'காரில் கேப் டிரைவர் செய்த ஆபாசம்'... பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இளம் பெண்ணை மாற்று பாதையில் அழைத்து சென்று, ஆபாசமாக நடக்க முயன்ற உபர் ஓட்டுனரை, இளம் பெண் ஒருவர் சாதுரியமாக காவல்துறையிடம் சிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'நைசா வேற ரூட்ல கூட்டிட்டு போயிட்டு'... 'காரில் கேப் டிரைவர் செய்த ஆபாசம்'... பதற வைக்கும் சம்பவம்!

லண்டனில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக உபர் டாக்ஸியை புக் செய்துள்ளார். இளம் பெண்ணின் புக்கிங்கை எடுத்து கொண்ட நதீம் அப்சல் என்ற பாகிஸ்தானிய உபர் ஓட்டுநர் இளம் பெண்ணை அழைத்து செல்வதற்காக வந்துள்ளார். இதனிடையே டாக்ஸி கிளம்பிய சிறிது நேரத்திலேயே, வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் அப்சல் தனது டாக்சிசியை இயக்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எதற்காக இவ்வாறு செல்லுகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு  அப்சல், இந்த வழியில் சென்றால் எளிதாக சென்று விடலாம் என கூறியுள்ளார். ஆனால் சிறிது நேரத்திலேயே தனது ஆடையை கழற்றிய அப்சல், தனது அந்தரங்க உறுப்பை தொடுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம் பெண், அதற்கு மறுப்பு தெரிவிக்க மீண்டும் ஆபாசமாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் சாதுரியமாக செயல்பட்ட அந்த பெண் அப்சல்பேசிய உரையாடல்கள் அனைத்தையும் தனது மொபைல் போனில் பதிவு செய்து கொண்டே வந்துள்ளார். இதனை அறியாமல்  உபர் ஓட்டுநர் அப்சல் தொடர்ந்து ஆபாசமாக பேசி கொண்டே வந்துள்ளார். 40 நிமிடங்களில் செல்ல வேண்டிய அந்த பெண்ணின் வீட்டிற்கு, பயணத்தை இழுத்து அடித்து கொண்டே வந்து, இறுதியில் அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் வந்து இறக்கி விட்டுள்ளார்.

இதற்கிடையே தனது வீட்டிற்கு அருகில் வருவதற்கு முன்பே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த பெண், அங்கு தயாராக இருந்த காவல்துறையினரிடம் தான் வைத்திருந்த ஆதாரங்களை அளித்துள்ளார். இதுகுறித்து எதுவும் அறியாத உபர் ஓட்டுநர் அப்சல், அதிர்ச்சியில் வாயடைத்து போனார்.

இதனைத்தொடர்ந்து அப்சலை கைது செய்த காவல்துறையினர், அவரின் பெயரை பாலியல் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்த்தனர். இதனால் அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை கிடைப்பதோடு, இனிமேல் அப்சல் டாக்ஸி ஓட்டவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

SEXUALABUSE, POLICE, UBER DRIVER, SEX ACTS, FEMALE PASSENGER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்