நண்பருக்கு 'ஜாமீன்' கையெழுத்து போட வந்து... சொந்த செலவில் 'ஆப்பு' வைத்துக்கொண்ட புதுக்கோட்டை இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு டிக் டாக் செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

Advertising
Advertising

ஊரடங்கு காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அனைவரிடமும் போலீசார் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி வருகின்றனர். மேலும் முகக்கவசம் இன்றி வெளியில் வருவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி என்னும் பகுதியில் கடந்த 3-ம் தேதி போலீசார் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வெள்ளாள விடுதியை சேர்ந்த பாலையா என்னும் வாலிபர் முகக்கவசம் இன்றி வாகனம் ஓட்டி வந்துள்ளார். அவரது வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் ஜாமீன் கையெழுத்து போட இருவரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.

அவரும் தன்னுடைய நண்பர்கள் மகேந்திரன், வெற்றிவேல் ஆகிய இருவரையும் ஜாமீன் கையெழுத்து போட அழைத்து வந்துள்ளார். பைக்கை எடுத்துக்கொண்டு பாலையா சென்று விட, போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த  வெற்றிவேல் போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீட்டுடன் ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவேற்றி வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதை அடுத்து, வெற்றிவேல் மற்றும் அவருக்கு வீடியோ எடுக்க உதவிய  மகேந்திரன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்