'விட்டா டயரே இல்லாம 'பஸ்' ஓட்டுவாங்க போல' ...'நாலு இருக்க வேண்டிய இடத்துல' ...அதிர்ச்சி வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பேருந்தின் பின்புறத்தில் 4 டயர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 2 டயர்களை மட்டும் வைத்து பேருந்து இயக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றசாட்டுகள் அவ்வப்போது எழுவது வழக்கம். முறையாக பராமரிக்கப்படாத பேருந்துகளால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் பொள்ளாச்சி அருகே பலத்த காற்று காரணமாக அரசு பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு, மேற்கூரையை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியிலிருந்து திருப்புர் சென்ற அரசு பேருந்தின் பின்புறம் நான்கு டயர் இருக்க வேன்டிய இடத்தில் 2 டயர்களை மட்டும் வைத்து பேருந்து இயக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

BUS, POLLACHI, TIRUPPUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்