இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனத்தில் முன் அமர்ந்து இருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டு பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெங்கடேசன் – வனிதா தம்பதியினர், கோயம்பேடு மெட்ரோ ரயில் ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது இரண்டு வயதான பெண் குழந்தை ரன்யாவுடன், இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
குழந்தை ரன்யா இருசக்கர வாகனத்தில் முன்னால் அமர வைக்கப்பட்டிருந்தது. நெற்குன்றம் அருகே மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, வெங்கடேசன் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டது.
சாலையில் விழுந்த குழந்தையின் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தங்கள் கண் முன்னே உயிரிழந்த குழந்தையைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்தி மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருச்சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி இருந்தாலும், குழந்தைகளை கணக்கில் கொள்ளாமல் முன்னும், பின்னுமாக பெற்றோர் ஏற்றிச் செல்கின்றனர். ஹெல்மெட் அணிவதை, அலட்சியப்படுத்துவதாக சுட்டிக்காட்டும் போக்குவரத்து காவல்துறையினர், விதிகள் பாதுகாப்பான பயணத்திற்காக தான் என்பதை உணர்ந்தாலே விபத்துக்களையும், இழப்புகளையும் தவிர்க்கலாம் என்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- துணை முதல்வரின் பிரச்சார வாகனம் கவிழ்ந்து விபத்து.. பதறிய தொண்டர்கள்!
- கோழிக்குஞ்சை காப்பாத்துங்க..6 வயது வைரல் சிறுவன்... பள்ளி நிர்வாகம் பாராட்டு!
- 'என் கண் முன்னாடியே'...'தங்கச்சிக்கு இப்படி ஆகிப்போச்சே'..நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!
- சுழன்றடித்த பேய்மழை.... 27 பேர் உயிரிழப்பு... 400 பேர் படுகாயம்...
- 'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது!
- ‘பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து.. 14 பேர்..’ பதறவைத்த விபத்து!
- 'எக்ஸ்பிரஸ் சாலையில் தொடரும் சோகம்'...கோரமான விபத்தில் சிக்கிய பயணிகள் பேருந்து!
- ‘கை, கால்கள் கட்டப்பட்டு, பரிதாப நிலையில் 5 வயது சிறுமியின் சடலம்’.. பதற வைக்கும் கொடூர சம்பவம்!
- நடுக்கடலில் கப்பலில் ஏற்பட்ட கோளாறு .. தடுமாறிய 1300 பயணிகள்.. திக் திக் நிமிடங்கள்!
- ‘சாலையைக் கடக்க முயற்சித்த பெண்’.. வந்த வேகத்தில் அடித்து தூக்கி வீசப்பட்டு விபத்து!