'அலட்சியமாக தொங்கவிடப்பட்ட கேபிள் ஒயர்'... 'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கேபிள் ஒயர், இருசக்கர வாகனத்தில் சுற்றி, தடுமாறி கீழே விழுந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. 31 வயதான இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. சோழிங்கநல்லூரில் பல்பொருள் அங்காடி ஒன்றை முகமது அலி ஜின்னா, வைத்துள்ளார். நேற்றிரவு ஒரு மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு முகமது அலி ஜின்னா திரும்பியுள்ளார். ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் முகமது வந்து கொண்டிருந்தார்.
ஓரிடத்தில் சாலை தடுப்புக்கு மேலே, கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் ஒயர் ஒன்று சாலை வரை நீண்டு சுற்றிக் கொண்டிருந்தது. சாலை தடுப்பு ஓரமாக இருசக்கர வாகனத்தில் வந்த, முகமது அலி ஜின்னாவின் வாகனத்தில் கேபிள் ஒயர் சிக்கியது. இதனால் நிலை தடுமாறி முகமது அலி ஜின்னா கீழே விழுந்தார்.
அப்போது, ஜின்னா தலைகவசமும் அணியாததால் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியில் அலட்சியமாக தொங்க விடப்பட்ட கேபிள் ஒயர் தான் இந்த உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘5 வயது, 5 கிலோ மீட்டர், மெரினாவில் நீந்தி சாதித்த சிறுமி’.. குவியும் பாராட்டுக்கள்!
- 'இங்க ஏற்கனவே சுத்தமா இல்ல! அதுல இதுவேறயா'?.. அதிர வைக்கும் அறிவிப்பு!
- 'எல்லோருக்கும் வாழ்த்துக்கள்'... 'வீடியோ பதிவிட்டு இளைஞர் செய்த விபரீதம்'!
- 'வெறும் ஸ்பேர் பார்ட்ஸ்க்காகதான் சாமி செஞ்சோம்'.. பதற வைக்கும் திருட்டு கும்பல்!
- ‘சிறுவனுக்கு எமனாக மாறிய ராட்டினம்’!.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்!
- 'டி.வி. பார்த்த சிறுமியை அடித்து, வெயிலில் நிற்க வைத்த கொடூரம் '... '5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- மனைவி வீட்டுக்குள் வைத்துப் பூட்டியும் கேட்காமல்.. 8 பேர் மீது ஆசிட் ஊற்றிய கணவர்..
- 'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!
- 'ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது'... 'அதிரடி உத்தரவு!'
- 'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!