'கடவுள்' தான் 'வீடியோ' எடுக்க சொன்னாரு...வாலிபர்களால் 'பதறிய' தூத்துக்குடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ராக்கெட், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை பூமியிலிருந்து பார்க்கும்படியான தொலைநோக்கி மாதிரிகள் வைக்கப்பட உள்ளது.

இதனைப் பார்வையிட மக்களுக்கு கல்லூரி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கல்லூரிக்குள் புகுந்த 2 பேர் அங்கு இருக்கும் அனைத்தையும் வீடியோ எடுத்துள்ளனர்.இதைக்கண்டு சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர்கள் ஜாபர் அலி, ரஷிக் அகமது எனவும் தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கனவில் கடவுள் வந்து இந்த கல்லூரியை வீடியோ எடுக்க சொன்னார்.அதனால் தான் எடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.மீண்டும்,மீண்டும் அவர்கள் சொன்னதையே சொன்னதால் மூன்று பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அங்கு அவர்களுக்கு 10 நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரிடமிருந்தும் 8 செல்போன்கள்,ஹார்டு டிஸ்குகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலீசார் வேறு ஏதேனும் அமைப்புகளுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்