‘தண்டவாளத்தில் சிக்கிய பைக்..’ மீட்க முயன்ற இளைஞர்களுக்கு ‘நொடியில் நடந்த பயங்கரம்..’
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் அருகே தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பழையனூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் நேற்று இரவு அரிசி மூட்டையை பைக்கில் ஏற்றிக்கொண்டு சின்னம்மா பேட்டை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்தபோது அங்கிருந்த கற்களில் பைக்கின் டயர் சிக்கியுள்ளது.
இதையடுத்து இருவரும் இறங்கி அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றுள்ளனர். அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் பைக்குடன் சேர்த்து இருவரும் 500 மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்று இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நா படிச்சு உன்ன காப்பாத்துறன்ப்பானு சொன்னாளே'.. குடிபோதை ஆசாமியால் 3 வயது சிறுமி பரிதாபம்!
- ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- 'ஒரு நொடியில் நடந்த விபரீதம்'.. ‘டிராஃபிக் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பரிதாப கதி’... வீடியோ!
- 'திருமண நிகழ்ச்சிக்கு போனபோது நேர்ந்த சோகம்'... 'லாரி மீது கார் மோதி 3 பேர் பலி'!
- 'என்னோட பொண்ணு எங்க'?... 'சொன்னாதான் ட்ரீட்மென்ட் எடுப்பேன்'... கலங்கி நின்ற மருத்துவர்கள் !
- 'என்னதான் போதையில் இருந்தாலும்'..'இப்படியா கேக்குறது?'.. தலைகீழாகக் கவிழ்ந்த கார்.. டிரைவரின் விநோத பேச்சு!
- 'ஓடும் ரயிலில் இறங்க முயற்சி'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- 'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'!
- 'காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த சோகம்'... ‘தலைகீழாக கார் கவிழ்ந்து 5 பேர் பலி’!
- ‘50 அடி பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோரவிபத்துக்குள்ளான பேருந்து’.. 29 பேர் பலியான சோகம்..!