'தமிழகத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு!'.. 'உடல் கருகி பலியான சோகம்!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புது கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், எளாவூர், கவரைபேட்டை , ஈகுவார்பாளையம், பாதிரிவேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் தொடங்கி 3 மணி நேரம் தொடர் மழை பெய்தது. இடியுடன் கூடிய இந்த கனமழையால் அப்போது வானம் இருண்டு மதிய வேளையானது இரவு போல காட்சியளித்தது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி விஜயன் என்பவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் அவரை மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான விஜயனுக்கு லட்சுமி என்கிற மனைவியும் வனிதா என்ற மகளும் பரத் என்ற மகனும் உள்ளனர்.

இதேபோல் மாதர்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவரும் அவருடைய மனைவி புஜ்ஜியம்மாளும் செதிலபாக்கம் அருகே உள்ள புதுக்கண்டிகை ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் வானத்தில் மின்னல் பளிச்சிட்டது.  மின்னலை பார்த்த இந்த அதிர்ச்சியில் புஜ்ஜியம்மாள் இறந்ததாகவும் அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் புஜ்ஜியம்மாளின் உடலில் எந்த காயமும் இல்லாததாலும் அவரது கணவருக்கு எதுவும் ஆகாததாலும் அவர் மின்னல் தாக்கி இறந்தாரா அல்லது மின்னலை பார்த்து அதிர்ச்சியில் இறந்து விட்டாரா என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தவிர கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் அருகே சூரப்பூண்டி என்கிற ஊரில் வசித்து வந்த வசந்தா என்பவரும் வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்