அம்புட்டும் கவரிங்... 2 கோடி ரூபாய் அபேஸ்... தினுசு தினுசா திருடுறாங்களேப்பா...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 2016-லிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் வெறும் கவரிங் நகைகளைக் கொடுத்து இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தங்க நகையைக் கொடுத்தாலே 10 முறை உரசிப்பார்த்து பாதி தங்கத்தை கரைத்து விடும் கூட்டுறவு கடன் சங்கத்தில்தான் இப்படி ஒரு நூதன திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் இந்த மோசடியைக் கண்டு பிடித்தனர். இந்த மோசடியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றியவர்களே கூட்டணி அமைத்து ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
2 கோடி ரூபாய் அளவுக்கு, கவரிங் நகைகளுக்குக் கடன் கொடுக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அறிந்ததும் நகை மதிப்பீட்டாளர் பாலையா தப்பி ஓடிவிட்டார். கூட்டுறவுச் சங்கப் பதிவாளர் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தேனாம்பேட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எந்த அலுவலகப் பணிகளும் நடைபெறாமல் சங்கம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகக் கூறப்படுகிறது.
கவரிங் நகைகளை வைத்து 2 கோடி ரூபாய்க்கு எப்படி கணக்குக் காட்டுவதெனத் தெரியாமல் தடுமாறி வரும் அதிகாரிகள், முறைப்படி காவல்துறையில் புகார் கொடுக்கவும் முடியாமல் விழிபிதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்