குளிக்க போன 'பசங்கள' காணோமே... தேடிச்சென்ற தாய்க்கு 'அடுத்தடுத்து' காத்திருந்த அதிர்ச்சி... 'நடுங்க' வைத்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் குளிக்க சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதி முத்து. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான உஷாராணிக்கு சீமான் அல்போன்ஸ் மைக்கேல்(14) என்ற மகனும், 2-வது மனைவி மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப்(9) என்ற மகனும் உள்ளனர். இதில் சீமான் 7-ம் வகுப்பும், எட்வின் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிறுவர்கள் இருவரும் உறவினர் ஒருவருடன் அந்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றிற்கு குளிக்க சென்றனர். சிறிது நேரத்தில் சிறுவர்களின் உறவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும், சிறுவர்கள் மட்டும் குளித்துக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. வெகுநேரம் ஆகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிணற்றுக்கு சென்று பார்த்து இருக்கின்றனர்.
அப்போது கிணற்றுக்குள் செருப்பு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சிறுவர்கள் கிணற்றுக்குள் மூழ்கி இருக்கலாம் என்று கருதினர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி தேடியதில் எட்வின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சீமான் உடல் கிடைக்கவில்லை.
தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு சீமான் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 2 சிறுவர்களையும் குளிக்க கிணற்றுக்கு அழைத்து சென்றது சிறுவர்களின் சித்தப்பாவான ரத்தினராஜ் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் சிறுவர்கள் இருவரையும் கிணற்றில் தள்ளி ரத்தினராஜ் கொன்றது தெரிய வந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணன் மகன்களை கொன்றதாக ரத்தினராஜ் போலீசிடம் தெரிவித்தார். இதையடுத்து ரத்தினராஜை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னுடைய அந்த 'பழக்கம்' தான் காரணம்... 'தற்கொலை' செய்துகொண்ட இளம்தம்பதி... 'உருக்கமான' கடிதம் சிக்கியது!
- ‘கல்யாணமாகி மூன்றே வருடத்தில்’... ‘தடையாக இருந்ததால்’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’... 'தவிக்கும் 2 வயது குழந்தை'!
- 'ஆபீஸ்ல லீவு கொடுக்கல'... 'வாட்ஸ்ஆப்' மூலம் இளைஞர்கள் செய்த கொடூரம்'...சென்னையை கலங்கடித்த பீதி!
- ‘நடுராத்திரி வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. ‘திடீரென உருட்டுக்கட்டையால் விழுந்த அடி’.. விவசாய தம்பதிக்கு நடந்த கொடுமை..!
- ‘மகள் வயது பெண்ணுடன் திருமணம்’.. ‘தந்தை மீது புகார் கொடுத்த மகள்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- முதல் 'மனைவிக்கு' தெரியாமல் 2-வது திருமணம்... 2 மனைவிகளும் 'வெறுத்ததால்'... 'மதுரை' வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- காதல் 'திருமணம்' செய்த 9 மாதங்களில்...'தற்கொலை' செய்துகொண்ட 'கர்ப்பிணி' மனைவி... அதிர்ச்சியில் கணவர் எடுத்த 'விபரீத' முடிவு!
- ‘கடைசியாக.. டீ சொல்லுங்க ராஜேந்திரன்’.. நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிட்டது குறித்து DCP-ன் ‘தெறி’ ட்வீட்..!
- கேட்குற 'பணத்த' குடுக்கலன்னா... உன்னோட அந்த 'வீடியோ' எல்லாம் 'ரிலீஸ்' பண்ணிடுவேன்... கணவனே மனைவியை 'மிரட்டிய' கொடுமை!