"பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா?".. மழைக்கு ஸ்கூல் லீவானு கேட்ட இணையவாசி.. Thug Life பதில் கொடுத்த கலெக்டர்!!😅

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும்.

"பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா?".. மழைக்கு ஸ்கூல் லீவானு கேட்ட இணையவாசி.. Thug Life பதில் கொடுத்த கலெக்டர்!!😅
Advertising
>
Advertising

இதனிடையே, இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாளில் இருந்தே மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
twitterati ask about leave in virudhunagar collector responds

அதன்படி, சென்னையில் பல இடங்களில் மழை பெய்திருந்தது. பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியிலும் அதிக சீற்றத்துடன் காணப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர் (8ஆம் வகுப்புவரை), நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்திருந்தனர்.

அதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இரண்டு தினங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களிலும் மழையின் அளவு பல இடங்களில் கணிசமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த நிலையில், விடுமுறை குறித்த விருதுநகர் மாவட்ட கலெக்டரிடம் இணையவாசி ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், இதற்கு கலெக்டர் சொன்ன பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

விருதுநகர் மாவட்ட கலெக்டராக மேகநாத் ரெட்டி பணியாற்றி வருகிறார். பல மாவட்டங்களிலும் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு மத்தியில், விருதுநகர் மாவட்டத்தில் மழை காரணமாக விடுமுறை என கடந்த ஆண்டு டிவியில் ஒளிபரப்பட்ட புகைப்படத்தை ஒருவர் பகிர்ந்து, நாளைக்கு விடுமுறையா என்பதை கன்ஃபார்ம் செய்யுமாறு கலெக்டர் மேக்நாத் ரெட்டியை டேக் செய்து கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர் மேக்நாத் ரெட்டி, "பாலே இங்கே தேறல பாயாசம் கேட்குதா" என்ற தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் பாடலின் வரிகளை குறிப்பிட்டு, "மழை - இல்லை, பள்ளி - ஆமாம்" என கூறி, "தவறான செய்தி. சீக்கிரம் தூங்கி பள்ளிக்கு நேரத்திற்கு எழுந்திருங்கள். குட் நைட்" என குறிப்பிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை குறித்த வதந்திக்கு பாடல் வரிகளுடன் மேகநாத் ரெட்டி சொன்ன பதில் இணையவாசிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.

RAIN, VIRUDHUNAGAR, MEGHANATH REDDY, COLLECTOR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்