‘நாங்க என்கரேஜ் பண்றோம்.. நீங்க இத பண்ணுங்க..!’.. கொரோனா எதிரொலியால் ஊழியர்களுக்கு இப்படி ஒரு சலுகையா?!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொடூரமான உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு நாடுகளிலும் பரவியதால் நோய்வாய்ப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதன் விளைவாக, உள்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லவும், வெளிநாட்டில் இருந்து உள்நாட்டுக்குள் வருவதற்குமான கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் கண்டிப்புடன் விதிக்கத் தொடங்கின.

ஒவ்வொரு நாட்டின் உள்ளும் நுழைபவர்கள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஒரு நாட்டுக்குள் நுழைய முடியும் என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் வடகொரியாவில் பேச்சுக்கே இடமின்றி, கொரோனா வைரஸ் வந்தால் சுட்டுக்கொல்லுதல்தான் தீர்வு என்கிற நிலைக்கு தீவிரமடைந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருகி வருவதால் பல்வேறு நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டன. சில நிறுவனங்கள் மட்டும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளுடன் உரிய நடவடிக்கைகளை ஆவன செய்து வருகின்றன. அவ்வகையில் தமது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு

ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

CORONAVIRUS, COVID19

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்