‘எனக்கே பிள்ளை இல்ல உனக்கு பிள்ளையா’... பெண் செய்த ‘நடுங்க’ வைக்கும் காரியம்... ‘உறைந்துபோய்’ நின்ற குடும்பத்தினர்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையைக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முல்லைநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் - நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், செல்வகணேஷ் என்ற 6 மாத ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல செல்வராஜ் வேலைக்குச் சென்றுவிட, குழந்தைக்கு பால் கொடுத்த நந்தினி தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என நந்தினி சத்தம்போட, அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
இதையடுத்து நந்தினியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் குழந்தையைத் தேடிப் பார்த்தபோது, குழந்தை வீட்டின் பின் இருந்த கிணற்றில் கிடந்துள்ளது. அதைப் பார்த்து உறைந்துபோன அவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நந்தினியின் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்த அவருடைய அத்தை பஞ்சவர்ணம்தான் குழந்தையை கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன் பஞ்சவர்ணத்திற்கு பிறந்த ஒரு ஆண் குழந்தை, தாய்ப்பால் குடித்துக்கொண்டிருக்கும்போது மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. அந்த அதிர்ச்சியில் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நந்தியின் வீட்டில் தங்கியிருந்த பஞ்சவர்ணம், ‘எனக்கே பிள்ளை இல்ல. உனக்கு பிள்ளையா’ என அடிக்கடி கூறி வந்ததாகவும், மனநிலை பாதிக்கப்பட்டதால் அத்தை அப்படி பேசுகிறார் என நந்தினி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து நந்தினியின் கணவர் செல்வராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பஞ்சவர்ணத்தை கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு அவர் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
'வெள்ளை சட்டை.. தொப்பி.. சைக்கிள். யாருப்பா இவரு??'.. 'மாஸ் காட்டிய' செயல்.. குவியும் பாராட்டுக்கள்!
தொடர்புடைய செய்திகள்
- 'கள்ளுக்கடை', சுற்றுலா... 17 கொலைகள்... இந்தியாவின் மிகப்பெரிய 'சீரியல்' கில்லர்... சிக்கிய பின்னணி!
- பொள்ளாச்சி வழக்கு... சுஜித், சுபஸ்ரீ... ஹைதராபாத் என்கவுண்டர்... 2019-ம் ஆண்டின் மறக்க 'முடியாத' துயரங்கள்!
- ‘கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு’!.. குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
- காதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...
- ‘இன்னொரு டி.என்.ஏ-வும் கலந்துருக்கு’!.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’!.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..!
- ‘கொலைக்குமுன் கறி விருந்து’!.. ‘காட்டுக்குள் சடலமாக கிடந்த கர்ப்பிணி ’.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- 'இது தப்பான உறவுன்னு சொன்னேன்'...'கேக்கல'...'பிளான் போட்டு தூக்கிய தாய்'...பதற வைக்கும் சம்பவம்!
- ‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்...
- ‘என்ன தூக்குல போடுங்க’!.. ‘அமைச்சரிடம் மனு கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மனைவி’.. அதிரவைத்த காரணம்..!
- ‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...