'ரூ.150 கோடி மதிப்புள்ள... அரிய வகை ஜப்பான் 'இரிடியம்' உங்களுக்கு வேண்டுமா'!?.. மோசடி கும்பலின் பலே பிரச்சாரம்!.. போலீஸ் அதிரடி!.. பதறவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜப்பானுக்கு அனுப்ப இருந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் இருப்பதாகக் கூறி, பணம் பறிக்க முயன்ற மோசடிக் கும்பல் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டு, மோசடிக் கும்பல் ஒன்று காரில் சுற்றித் திரிவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதூர் பாண்டியாபுரத்தில் தனிப்படை போலீசார் இன்னோவா கார் ஒன்றை மறித்து சோதனை செய்தபோது, அதில் அரிவாள்- கத்தி போன்ற ஆயுதங்களுடன் 6 குப்பிகளில் அடைக்கப்பட்ட ரசாயனக் கலவை பெட்டியைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், காரில் இருந்த இருவரும் இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் வைத்தியலிங்கம் என்பது தெரியவந்தது. அந்த 6 குப்பிகளிலும், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாக போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜப்பானின் ஜே.வி.சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.விடம் இருந்து கடந்த 2010 ஆம் ஆண்டு ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் இரிடியம் ஆர்டர் செய்திருந்ததாகவும், மும்பையில் இருந்து ஜப்பானுக்கு இரிடியம் அனுப்பியபோது, அதிலிருந்து 10 பெட்டிகள் மாயமானதாகவும், ஒவ்வொரு பெட்டியிலும் 6 இரிடியம் குப்பிகள் வைத்திருந்ததாகவும், மாயமான 10 பெட்டிகளில் 3 பெட்டிகள் ராமநாதபுரம் சாமிநாதனுக்கு கிடைத்ததாகவும் தாறுமாறாக கதை அளந்துள்ளனர்.
மேலும், கள்ளச்சந்தையில் இரிடியத்திற்கு கடும் கிராக்கி இருப்பதால் அவற்றை விற்பதற்காக சாமிநாதன் தன்னிடம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் வைத்தியலிங்கம். தூத்துக்குடியைச் சேர்ந்த மரியதாஸ், முருகன் ஆகியோரை, தாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வரவழைத்த முத்துராமலிங்கம், வைத்திலியங்கம் ஆகியோர் "ரேர் பீஸ்" தங்களிடம் இருப்பதாக கூறி செல்வந்தர்கள் இருந்தால் அழைத்து வரச் சொல்லியுள்ளனர்.
அப்படி வருபவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்புவதுதான் இந்த மோசடி கும்பலின் சதித் திட்டம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்து போலீசார் இவர்களை சுற்றி வளைப்பதற்குள் லாட்ஜில் இருந்து தப்பியவர்களை வாகனச்சோதனையில் மடக்கி உள்ளனர் காவல்துறையினர். இதையடுத்து முத்துராமலிங்கம், வைத்தியலிங்கம், முருகன்,மரியதாஸ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இரிடியம் என்று மோசடிக்கும்பல் காட்டிய குப்பிகளில் இருப்பது என்ன என்பதைக் கண்டறிய அவற்றை சென்னைக்கு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபோன்று இந்த மோசடிக் கும்பல் எத்தனை பேரிடம் ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மும்பையில் இரிடியம் மாயமானதாகக் கூறுவதே பொய் என்றும், வேதியியல் ஆய்வுகளுக்கு உதவும் அரியவகை உலோகமான இரிடியம், ஒரு கிராம் பல கோடி ரூபாய்க்கு விலை போகும் என்பதெல்லாம் கட்டுக்கதை என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச அளவில் ஒரு கிராம் இரிடியம் மெட்டல் 99 அமெரிக்க டாலர்கள் அதாவது 7,296 ரூபாய் 25 பைசாவுக்கு அமேசான், இண்டியாமார்ட், அலிபாபா உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வணிகத் தளங்களில் விற்பனைக்கு உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்கம், பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகம் தான் இரிடியம் என்றாலும், இதனை அறிவியல் ரீதியாக பயன்படுத்த தெரியாதவர்கள் கையில் வைத்துக் கொண்டு பலகோடி ரூபாய் பேரம் பேசுவது நகைப்புக்குரியது என்கின்றனர் தூத்துக்குடி போலீசார்.
இரிடியம், சிவப்பு பாதரஸம் உள்ளதாகவும், பல கோடி ரூபாய் விலை போகும் என்றும் யாராவது பொய் பேசி மோசடி செய்தால், உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிரபல கம்பெனி’.. ‘கை நிறைய சம்பளம்’.. ஒரே ஒரு போன்காலால் ‘ஐடி’ பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!
- சென்னையை அதிரவைத்த 'பிட்காயின்' மோசடி!.. நைஜீரியாவில் இருந்து ஆட்டிப்படைத்த... சர்வதேச திருட்டு கும்பல்!.. அடையாறு காவல்துறை அதிரடி!.. பகீர் பின்னணி!
- இந்த திட்டத்தின் கீழ் 'மாதந்தோறும்' ரூ.3000 பெறலாம்... தகுதி மற்றும் 'விண்ணப்பிக்கும்' வழிமுறைகள் உள்ளே!
- '2' கோடி 'ரூபா'க்கு ஆசைப்பட்ட 'தம்பதி'... 'கடைசி'யா 'கை'ல இருந்ததும் மொத்தமா 'அபேஸ்' - அதிர்ச்சியில் உறைந்த 'கணவன்' - 'மனைவி' - நடந்தது 'என்ன'???
- 'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க?'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி!'...
- சென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக ஹர்பஜன் சிங் 'பரபரப்பு' புகார்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- வீட்ல பற்றி எரிஞ்ச தீ-க்கு பின்னாடி இவ்ளோ உண்மைகள் இருக்கா...! 'ரூம்ல செக் பண்ணினப்போ முதல் ஷாக்...' 'சிசிடிவில 2-வது ஷாக்...' 3-வது ஷாக் தான் உச்சக்கட்டம்...!
- 'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்!'...
- வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!
- 'பளபளனு இருக்கு.. அத்தனையும் புதுநோட்டு!'.. பைபாஸ் ரோட்டில் வைத்து வாங்கிய ரூ.55 லட்சம் கடன்!'.. 'வீட்டுக்கு' போனதும் தெரியவந்த 'ஷாக்'!