சீக்கிரம் தாலியை கட்டு.. சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம்.. பரபரப்பான மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை ஓர கோவிலில் காதலர்கள் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ். துவக்கத்தில் இருவரும் நண்பர்களாக பேசிவந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.

தினேஷ் - கார்த்திகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் வீட்டினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து, தினேஷ் தனது வீட்டாரிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அப்போது தினேஷின் தாய் திருமணத்திற்க்கு சம்மதித்திருக்கிறார். இதனையடுத்து மணமகள் வீட்டாருக்கு தெரியாமலேயே திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் தினேஷ் - கார்த்திகா எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். ரோஜா மாலையுடன் அங்கு வந்த ஜோடி, மாலையை மாற்றிக்கொண்டது. அப்போது தினேஷ் தனது காதலிக்கு தாலி கட்டினார். அதனை தொடர்ந்து இருவரும் மாலையும் கழுத்துமாக அங்கிருந்த வேப்பமரத்தை சுற்றி வந்தனர். பின்னர் தினேஷின் தாயாரிடத்தில் இருவரும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

தூத்துக்குடியின் பிராதன சாலையில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலில் அவசர அவசரமாக நடைபெற்ற இந்த திருமணத்தை அப்பகுதி வழியாக சென்ற மக்கள் பரபரப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில், இந்த திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் சிலர் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

 

MARRIAGE, ROADSIDE, TEMPLE, TUTICORIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்