‘பள்ளி மாணவிகளுடன் வந்த ஆட்டோ’.. திடீரென டிரைவருக்கு வந்த ‘நெஞ்சுவலி’.. கடைசியில் நடந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுநர் நெஞ்சு வலியால் துடித்தபோதும் மாணவிகளை பத்திரமாக வேறு ஆட்டோவில் ஏற்றிவிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராமலிங்கம் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளை தினமும் ஆட்டோவில் அழைத்துச் சென்று வந்துள்ளார். இதனால் பள்ளி மாணவிகள் இவரை ‘ஆட்டோ மாமா’ என அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து மாணவிகளை ஏற்றிகொண்டு வீட்டுக்கு ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராமலிங்கத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனே ஆட்டோவை சாலையோரமாக நிறுத்திவிட்டு மற்றொரு ஆட்டோவில் மாணவிகளை பத்திரமாக ஏற்றி வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் ஆட்டோவில் அமர்ந்தவாறே நெஞ்சுவலியால் ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். நெஞ்சுவலியால் துடித்தபோதும் மாணவிகளை பாதுகாப்பாக மற்றொரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TUTICORIN, SCHOOLSTUDENT, AUTODRIVER, DIES, HEARTATTACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்