'அவர் என்ன பாத்த போதும்'... 'பெட்டி பாம்பா அடங்கிருவாரு' ... தினகரன் அதிரடி !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் நீக்கப்படுவார் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டு வந்தார். அதிமுக இரண்டாக உடைந்து  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட போது, அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனிடையே தங்க தமிழ்செல்வனுக்கும், தினகரனுக்கும் பிரச்னை எனவும், அவர் விரைவில் கட்சியில் இருந்து விலக இருப்பதாகவும் செய்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் தங்க தமிழ்செல்வன், தொலைபேசி உரையாடலில் தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் “யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. ஊடகங்களில் சரியான முறையில் பேசுமாறு  தங்க தமிழ்செல்வனிடம் கூறினேன். சரியாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்க வேண்டி வரும் என கூறினேன். அவர் விஸ்வரூபம்லாம் எல்லாம் எடுக்க முடியாது.

அவர் என்னை பார்த்தால் போதும், பெட்டி பாம்பாக அடங்கி விடுவார். இனிமேல் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய கொள்கை பரப்பு செயலாளர் விரைவில் நியமிக்கப்படுவார்.மேலும் கடந்த மக்களவை தேர்தலில் தங்கதமிழ் செல்வனை மதுரை அல்லது திண்டுக்கல்லில் நிற்கச் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அவர் தோற்று விடுவார் என்பது எனக்கு முன்பே தெரியும்.

அதோடு 18 எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக எப்படி செயல்பட முடியும். திமுக கொண்டுவந்துள்ள சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன். ” எனத் தினகரன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்