தோழிக்கு TTF வாசன் கொடுத்த Gift.. அதுக்கு முன்னாடி பாதி வழியில் அவரே வெச்ச செம ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவர் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர்.

Advertising
>
Advertising

இதற்கு காரணம், தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன், சமீபத்தில் கூட லடாக் உள்ளிட்ட பல பகுதிகளில் பைக்கில் பயணம் மேற்கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் அவரது பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருந்தது.

அப்படி TTF வாசன் பகிரும் வீடியோக்கள், இணையத்தில் அதிக வைரலாகி பலரது லைக்குகளையும் அள்ளும். இந்த நிலையில், தனது தோழிக்கு பரிசு கொடுத்தது தொடர்பாக TTF வாசன் பகிர்ந்த வீடியோ, அதிக வைரலாகி வருகிறது. தோழியின் பிறந்த நாளன்று அவரை பைக்கில் வெளியே அழைத்து சென்ற வாசன், அவருக்கு பரிசு ஏதும் இல்லை என்பது போல பேசிக் கொண்டே வந்தார். மிகவும்  தமாஷாக பேசிக்கொண்டே வந்த TTF வாசன், அடுத்த ஆண்டு பிறந்தநாள் பரிசு தருகிறேன் என்றும் அவரிடம் கூறுகிறார்.

இப்படி கொஞ்ச நேரம் விளையாட்டாக தோழியிடம் பேசி விட்டு, இறுதியில் சாலை ஓரம் பைக்கை நிறுத்திய TTF வாசன், அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசு அளித்துள்ளார். அவர் பரிசு அளித்தது TTF என்ற பெயரில் வாசன், அஜீஸ் ஆகியோரை போல அதில் உள்ள ஒருவரான ஜெயஸ்ரீக்கு தான். அவருடன் தான் தற்போது பைக் பயணம் மேற்கொண்டு பிறந்த நாள் ஸ்பெஷலாக ஐ போன் பரிசளித்து வீடியோவை பகிர்ந்து கொண்டுள்ளார் TTF வாசன்.

சமீபத்தில், கடலூருக்கு TTF வாசன் வந்திருந்த போது அங்கே நடந்த விஷயம், அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

TTF VASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்