அன்னபூரணி பெண் சாமியார் தன் 2-வது கணவருக்கு தோட்ட பண்ணையில் சிலை: 20 நாட்களுக்கு முன் அகற்றம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுராந்தகம் அடுத்த தாதங்குப்பம் என்னும் பகுதியில் சாமியாராக வலம் வரும் அன்னபூரணி அரசு, தனது கணவர் அரசுக்காக சிலை ஒன்றை அமைத்து, அதற்கு தினந்தோறும் பூஜையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்த சிலை திடீரென காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் கிராமத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தாதங்குப்பம். இந்த கிராமத்தில் மகேஷ் என்பவரிடமிருந்து 2019-ம் ஆண்டு தனியாருக்கு சொந்தமான பண்ணை வீட்டுமனை பிரிவில் சுமார் 50 சென்ட் நிலம் வாங்கி உள்ளார் அன்னபூரணி.
அந்த இடத்தில் முள்வேலி அமைத்து 12-க்கு 12 சிறிய கட்டடம் கட்டப்பட்டு அதில் இறந்த இரண்டாவது கணவர் அரசு என்பவருக்கு உருவ சிலை அமைத்துள்ளார் அன்னபூரணி. இந்த உருவ சிலை அமைக்கப்பட்டு வழிபட்டு வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மூன்றாவது கணவரான ரோகித் என்பவர் 10-க்கும் மேற்பட்டோர் உடன் வந்து மினி லோடுவண்டியில் மார்பளாவு இருந்த் உருவ சிலையை அகற்றி ஏற்றிச் சென்றுள்ளார்
இப்பகுதியில் விசாரித்தபோது, 'இந்த இடம் பண்ணைவீடு கட்ட 50 செண்ட் வீதம் 16 பேர் வாங்கி உள்ளனர். இதை வாங்கியவர்கள் சென்னைவாசிகள். இந்த இடத்தை வாங்கியவர்களில் தற்போது 3 பேர் மட்டுமே பண்ணை வீடு கட்டி உள்ளனர். வார விடுமுறை தினத்தில் சில பேர் மட்டுமே வந்து செல்வார்கள் இங்கு நிரந்தரமாக யாரும் குடியிருக்கவில்லை' எனக் கூறுகின்றனர்.
அன்னபூரணி, வாங்கி வைத்த நிலத்தை பார்ப்பதற்கும் அவருடைய கணவர் உருவச்சிலையை பூஜை செய்வதற்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வந்துள்ளார். ஆனால் இவர் காரைவிட்டு இறக்கவில்லை எனவும் பிறகு இவர் இங்கு மறுமுறை வரவில்லை எனவும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.
இவரைத் தேடி யாரும் வரவில்லை பூஜையோ அருள்வாக்கோ சொல்லவில்லை என விசாரணையில் தெரியவருகிறது. ஒரு முறைதான் வந்து சென்று உள்ளார். மேலும் இவரைப் பற்றி முழு விவரம் இங்கே இருக்கக்கூடிய எவருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு 4 கணவன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் கணவர் பெயர் தெரியவில்லை என்றும் 2-வது கணவவர் அரசு என்பதும் இவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது கணவர் ரோகித் என்பவர் இரண்டாவது கணவர் அரசு சிலையை பண்ணை வீட்டில் இருந்து அகற்றி எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காணாமல் போன சிலை.. அதிர்ச்சியில் அன்னபூரணி??.. நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் விவகாரம்
- கோவை கோவில் திருவிழா.. மோதிக் கொண்ட இளைஞர்களை பிடித்து தலா 100 திருக்குறள் எழுத வைத்த போலீசார்
- VIDEO: பர்த்டேவை இப்படியா கொண்டாடுறது..! இளம்பெண்ணின் செயலுக்கு வலுத்த கண்டனம்.. போலீசார் அதிரடி ஆக்ஷன்..!
- அன்னப்பூரணி vs ஆங்கர்.. என்ன சாதாரணமா நெனச்சிட்டு இருக்கீங்க இல்ல...? நேர்காணலில் மூச்சு வாங்கியபடி ஆவேசம்
- உஷாரான அன்னபூரணி.. களமிறங்கிய போலீஸ்.. எல்லா நம்பரும் ஸ்விட்ச் ஆஃப்.. ட்விஸ்ட் அடிக்கும் விவகாரம்
- கொஞ்சம் உங்க பையை காட்டுங்க.. என்ன அது பேப்பர்ல சுத்தியிருக்கீங்க..? போலீசாரை அதிர வைத்த பயணி..!
- ‘ஐயா… பாலத்த காணோமுங்க…’- வடிவேலு காமெடி பாணியில் அமெரிக்காவில் நடந்த திருட்டு சம்பவம்
- 'போலீஸ் ஸ்டேஷன்ல ஜாயின் பண்ணின உடனே...' மொத வேலையா 'வெளிய' வைக்கப்பட்ட போர்டு...! - காவல் ஆய்வாளரை பாராட்டும் பொதுமக்கள்...!
- ‘விடாமல் வெளுக்கும் கனமழை’.. வெள்ளக்காடான செங்கல்பட்டு நகரம்..!
- ‘இந்த’ மாதிரியான பாஸ்வேர்டுகள் வச்சிருக்கீங்களா? நீங்கதான் டார்கெட்… கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க..! எச்சரிக்கும் போலீஸ்