VIDEO: 'கலவரம் ஆயிடும்...' '1000 பேரு ரெடியா இருக்காங்க...' 'சாப்பிட்ட சிக்கன் ரைஸ்-க்கு காசு கேட்டதுக்கு...' இளைஞர் செய்த காரியம்...' - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்MSM மலேசியன் பரோட்டா என்ற துரித உணவகத்தை சேபு அபு பக்கர் என்பவர் ஐஸ்ஹவுஸ் முத்தையா தெருவில் நடத்தி வருகின்றார்.
இந்த கடைக்கு கடந்த 11-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக 3 பேர் வந்துள்ளனர். சிக்கன் ஃப்ரைட் ரைஸ் வாங்கி விட்டு கடைக்காரர் அதற்கான பணத்தை கேட்டபோது வந்திருந்த மூவரும் கடை ஊழியர்களிடம், எங்களிடமே பணம் கேட்கிறாயா? நாங்கள் மூவருமே பாஜக கட்சி பிரமுகர்கள் என கூறி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் மூவர் பிரச்சனை செய்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மதுபோதையில் இருக்கும் நபர், "தான் பிஜேபி கட்சியைச் சேர்ந்த பிரமுகர் என்றும், கலவரம் ஆகிவிடும் என்றும், பிஜேபி ஆள் என மரியாதை இல்லையா? அமித்ஷா பிஏவுக்கு போன் செய்வேன் என்றும் அவர் வீடியோவில் பேசியிருப்பார். இதனையடுத்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் விசாரணையில் ஃப்ரைட் ரைஸ் கேட்டு பிரச்சனையில் ஈடுப்பட்டது பா.ஜ.க. பிரமுகர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து திருவல்லிக்கேணி மேற்கு தொகுதி செயலாளர் பாஸ்கர் மற்றும் பகுதி செயலாளர் புருஷோத்தமன் ஆகிய இருவரை ஐஸ் ஹவுஸ் போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் பகுதிகளில் உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், தனி நபரை தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஸ்கரன் மற்றும் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள பாஜக கட்சியை சேர்ந்த சூர்யா என்பவரை தேடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு முன்பாக பாஸ்கரனும் புருஷோத்தமனும் இதே எம்.எஸ்.எம் மலேசியன் பரோட்டா கடைக்கு வந்து ரூ.850-க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஏமாற்றி சென்றதாகவும் கடை ஊழியர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கூகுள்ல 'இந்த' பிரச்சனை இருக்குங்க...! 'தவறை கண்டுபிடித்த சென்னை இன்ஜினியரிங் மாணவர்...' 'வெறும் பாராட்டோடு முடிக்கல...' - கூகுள் கொடுத்த 'வாவ்' பரிசு...!
- 'ஆளுநர்' பதவி வாங்கித் தருவதாக கூறி... ரூ.8 கோடிக்கு மேல் மோசடி செய்த 'ஜோதிடர்'!.. பின்னணியில் யார்?.. அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!
- 'என்ன இது OTP நம்பர் வந்துகிட்டே இருக்கு...' 'மொபைல் ஆப்ல டிக்கெட் புக் பண்ணிட்டு...' 'பேங்க் அக்கவுண்ட் போய் செக் பண்ணினா...' - அதிர்ச்சியில் உறைந்து போன நபர்...!
- இப்டியொரு ‘பாசக்கார’ அண்ணனா..! 2 மாச சம்பளத்தை சேர்த்து வச்சு தங்கைக்கு கொடுத்த ‘காஸ்ட்லி’ கிப்ட்..!
- 'என் புள்ளைங்கள விட நான் தான் நெறைய சம்பாதிக்குறேன்...' 'பிரமிக்க வைக்கும் பாட்டியோட ஆனுவல் இன்கம்...' - பால் விற்று சாதனை...!
- 'தெரியாத நம்பர்ல இருந்து வந்த கால்...' 'ஒரு பெண்ணின் குரல்...' 'மொத்தம் மூணே மூணு கால்...' 'போட்ட ப்ளான் சக்சஸ்...' - சுக்குநூறாய் உடைந்து போன நபர்...!
- 'காருக்குள்ள ரகசிய அறை...' இடையில சொன்ன 'ஒரு வார்த்தை'யால கெடச்ச க்ளூ...! - ஒப்பன் பண்ணி பார்த்தப்போ காத்திருந்த அதிர்ச்சி...!
- ‘இந்த ஆயிலை வாங்கி தர முடியுமா?’.. பேஸ்புக்கில் வந்த பெண்ணின் ‘மெசேஜ்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே?!!'... 'ஆசையாக பெயர் வைத்த பெற்றோருக்கு'... 'அடுத்து காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!!'... 'பிறந்ததுமே அடித்த ஜாக்பாட்!'...
- 'பொங்கல் பரிசாக ரூ 2500!!!'... 'யாருக்கெல்லாம் கிடைக்கும்?... எப்போதிருந்து வழங்கப்படும்???'... 'முதலமைச்சர் அறிவிப்பு!'...