‘இதுவரை பாதிக்கப்படாமல் இருந்த திருச்சியில் 17 பேருக்கும் பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா!’.. ‘120 பேர் மருத்துவமனையில் அனுமதி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேற்று ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் 17 பேர், பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் என தமிழகத்தில் மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இதுவரை 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று வரை நோய் தொற்று உள்ளவர்கள் பட்டியலில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட வாசிகள் இல்லாததால் கொஞ்சம் நிம்மதி அடைந்து இருந்தார்கள். ஆனால் திருச்சி மருத்துவமனையில் முதலில் நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விபரம் அறிந்த பின் அந்த எண்ணிக்கை கூடியது. அதன் பின் திருச்சி ராமலிங்க நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் கண்டறியப்பட்ட நபர் என சேர்த்து மொத்தம் 74 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முன்னதாக திருச்சியில் மட்டும் கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது. இந்த 120 பேரை சோதனை செய்ததில் இவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தான் 29 பேருக்கான பரிசோதனையின் முடிவில் 17 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் திருச்சியில் 17 பேருக்கு நோய் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் உறுதி செய்தார் . எனினும் மீதமுள்ள 60 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே மதுரையைச் சேர்ந்த ஒருவரும், நேற்று விழுப்புரம் மற்றும் தேனியைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த ராமநாதபுரம் முதியவருக்கு கொரோனா தொற்று இருந்ததும் மற்றும் இன்று அதிகாலை கொரோனா சிகிச்சைப்பலனின்றி ஸ்டான்லி சென்னையைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்ததும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
மற்ற செய்திகள்
#COVID19outbreak: “தமிழகத்தில் கொரோனா பலி 5-ஆக உயர்வு”.. ‘கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு!’
தொடர்புடைய செய்திகள்
- ‘லாக் டவுனால்’... ‘சொந்தக்காரர்கள் இன்றி தவித்த நோயாளி’... 'சென்னை டாக்டரின் கண் கலங்க வைத்த செயல்’!
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘சென்னை மக்களுக்காக’... ‘அம்மா உணவகம், சூப்பர் மார்க்கெட் முதல்’... ‘அவசர தேவைகளுக்காக மாகராட்சியின்’... ‘அசத்தலான சிறப்பு இணையதளம்’
- கணவருக்கு வந்த 'போன்'... 'கஷாயத்தில்' மயக்க மருந்து... 'நாடகமாடிய' மனைவி 'கடைசியில்' கொடுத்த 'ஷாக்'... 'மிரளவைக்கும்' சம்பவம்...
- ‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’!
- 'தமிழகத்தில்' இன்று புதிதாக '74 பேருக்கு' கொரோனா... '485 ஆக' உயர்ந்த மொத்த 'பாதிப்பு'... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...
- '9 நாட்களில்' கட்டி முடிக்கப்பட்ட 'மருத்துவமனை'... '4 ஆயிரம் படுக்கை வசதிகள்...' 'வெண்டிலேட்டர்கள்...' 'பிரிட்டிஷ்' அரசின் வியக்க வைக்கும் 'சாதனை...'
- '48 மணி நேரத்தில் முழுமையாக குணப்படுத்தலாம்...' 'ஏற்கெனவே மருந்து இருக்கிறது...' 'ஆஸ்திரேலிய' மருத்துவர்களின் வியக்க வைக்கும் 'ஆய்வு முடிவு...'
- 'நாளை' முதல்... 'அத்தியாவசிய' பொருட்கள் 'விற்பனை' நேரம் 'குறைப்பு'... முதலமைச்சர் பழனிசாமி 'அறிவிப்பு'...
- 'பேபிக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாதா'... 'ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த தம்பதி'...காத்திருந்த அதிசயம்!