'ஆசையா சோனி LED டிவி வாங்கிட்டு போனவரு...' 'வீட்ல போய் ஆன் பண்ணி பார்த்தா...' - அதிர்ந்து போன வாடிக்கையாளர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தீபாவளி காலத்தில் கலைக்கட்டியிருக்கும் எலக்ரானிக்ஸ் விற்பனையில் சோனி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் போலி எல்.இ.டி டிவிக்களை விற்று வந்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் துணி வியாபாரமும், எலக்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையும் வசூலை அள்ளும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற காலங்களில் கள்ள சந்தையில் உலா வரும் பொருட்களின் எண்ணிக்கையயும் அதிகமாகும்.

அதேபோல் தான் திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில் நிஜாமுதீன் என்பவர் திருச்சி எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இக்கடையில், தீபாவளி பண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் சோனி நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி டிவியை அந்த எலக்ரானிக்ஸ் கடையில் வாங்கியுள்ளார். மேலும் வீட்டிற்கு சென்று டிவியை ஆன்  செய்தால் டிவி ஆன் ஆகவில்லை. சவுக்கத் அலி டிவி வாங்கிய கடைக்கு சென்று கடை உரிமையாளர் நிஜாமுதீனிடம் புகார் அளித்துள்ளார். இதைக் கண்டுகொள்ளாத நிஜாமுதீன் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்

இதையடுத்து உடனடியாக சவுகத் அலி, சோனி சர்வீஸ் சென்டருக்கு சென்று தான் வாங்கிய புதிய டிவியை பரிசோதித்தார். அப்போதுதான் சவுகத் அலி வாங்கிய டி.வி. போலி என்பது தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சவுகத் அலி இந்த மோசடி குறித்து பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சவுகத் அலி அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தியதில், அங்கிருந்த அனைத்து எல்.இ.டி டிவிக்களும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எலக்ரானிக் கடையின் உரிமையாளர் நிஜாமுதீன் போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்கள் முகம்மது பைசல், சரவணன் ஆகியோர்மீது 8 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முன்னனி நிறுவனங்களின் போலி 153 டிவிக்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்