‘காட்டுக்குள் சடலமாக கிடந்த மாணவி’!.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்குநாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் மாணவியின் காலணி கிடந்ததை உறவினர் ஒருவர் பார்த்துள்ளார்.
உடனே இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு தேடியபோது புதருக்குள் மாணவி வாய், கால்கள் துணியால் கட்டப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து மாணவி கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதிக்குமார் என்ற இளைஞரும், மாணவியும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், மாணவி வேறொருவருடன் பழகி வந்ததை மதிக்குமார் கண்டித்துள்ளார். ஆனால் இதை மாணவி கேட்காததால், காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்!
- ‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல!’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’!
- 'பொண்ணு வேலைக்கு போகுதுன்னு நினைச்சோம்'... 'காட்டில் நடந்த பயங்கரம்'... அதிரவைக்கும் தடயங்கள்!
- ‘மது பழக்கத்தில்’ இருந்து மீள உதவிய ‘மனைவி!’.. ‘கழுத்தை நெரித்துக் கொன்ற கணவர்!’.. ‘மிரள வைக்கும்’ காரணம்!
- ‘அறுவை சிகிச்சை மூலம் பிரசவம்’!.. ‘நீண்ட நேரம் மயக்கத்தில் இருந்த தாய்’!.. அதிர்ச்சியில் உறைய வைத்த ஸ்கேன் ரிப்போர்ட்..!
- ‘என்கிட்ட பேசமாட்டயா’!.. ‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் வாட்ஸ் அப் வீடியோ கால்’.. நொடியில் வக்கீலுக்கு நேர்ந்த பயங்கரம்..!
- ‘சார், என்னை ஒருத்தர்..!’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- ‘தூக்க மாத்திரை லட்டு’!.. ‘பஸ்ல தனியா வரவங்கதான் டார்கெட்’!.. பயணிகளை பதறவைத்த பெண்..!
- அரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!
- எங்களை 'தேடாதீங்க'... வேற மாதிரி 'முடிவு' எடுத்திருவோம்... கடிதம் எழுதிவைத்து விட்டு... 'தலைமறைவான' குடும்பம்!