என்ன தாத்தா...! 'ஏடிஎம்' கார்டு 'எக்ஸ்பயரி' ஆனது கூட தெரியாம இருக்கீங்க...! 'சரி நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்...' - நூதன மோசடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வங்கிக் கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 17 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமநகர் கண்டித்தெருவைச் சேர்ந்த 82 வயதான ராமகிருஷ்ணன் அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் பாலக்கரை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளை வங்கியில் 1990ஆம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கி தற்போது வரை சுமார் 32 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது செல்போனுக்கு கடந்த 3-ம் தேதி ஒருவர் போன் செய்து, தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து பேசுவதாகவும், ராமகிருஷ்ணனின் ஏடிஎம் கார்டு காலாவதி ஆகி விட்டதால் அதனை புதுப்பிக்குமாறும் முதியவரிடம் கூறியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த ராமகிருஷ்ணன், காலாவதி ஆகிவிட்டதே என்ற பயத்தால் அந்த நபர் கேட்ட ஏடிஎம் கார்டு நம்பரையும், செல்போனுக்கு ஓடிபி எண்ணையும் கூறியுள்ளார். இதுபோல் மூன்று முறை OTP எண்ணைப் பெற்றவுடன் தொலைபேசி அழைப்பை துண்டித்துள்ளார்.
அதன்பின் ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் பணம் எடுத்த SMS வந்துள்ளது. பதறிப்போன ராமகிருஷ்ணன் தன் பேரன் கிருபாகரனுக்கு தொலைபேசி மூலம் கூறியதையடுத்து, அவர் உடனடியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை இ-மெயிலுக்கு தனது தாத்தா ராமகிருஷ்ணன் வங்கிக் கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக புகார் செய்தி அனுப்பியுள்ளார்.
அதன்பின் எந்த ஒரு குறுஞ்செய்தியும் ராமகிருஷ்ணனுக்கு வரவில்லை. இந்நிலையில் கடந்த 8-ம் தேதி பாலக்கரையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளரை சந்தித்து, தனது வங்கிக் கணக்கில் 259 ரூபாய் மட்டுமே இருப்பதாக மேலாளர் மூலம் அறிந்த ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது தான் அந்த மர்ம நபர்கள் குறுஞ்செய்தி தகவலை பிளாக் செய்து, ராமகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் என 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு 'பத்து ரூபாய்' தாள் எல்லாத்தையும் 'காட்டி' கொடுத்திடுச்சு...! 'உங்கள எவ்வளவு நம்பினோம்...' - கடைசியில நீங்களே 'இப்படி' பண்ணிட்டீங்களே...!
- ATM பணப்பரிவர்த்தனை ‘கட்டணம்’ உயர்வு.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.. எப்போது முதல் அமல்..?
- 'கொரோனா தடுப்பூசி போட்டீங்களா'?... 'உங்களுக்கு செம ஆஃபர் காத்திருக்கு'... வங்கிகள் அதிரடி!
- கலெக்டர் பெயரையே பயன்படுத்தி... ஆன்லைனில் கல்லா கட்டிய கும்பல்!.. பகீர் பின்னணி!.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!
- 'சோஃபா' ரொம்ப பிடிச்சிருக்கு பிரதர்...! 'நானே வாங்கிக்குறேன்...' 'காசு கிரெடிட் ஆகும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவருக்கு...' - 'வெடிகுண்டு' போல் விழுந்த அந்த மெசேஜ்...!
- ‘இடுப்பில் மறைத்து ரகசியமாக கடத்தல்’!.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..!
- அய்யயோ...! அவரு வர்றத பாருங்களேன்...! 'ஆக்சிஜன் மாஸ்கோடு வேலைக்கு வந்த வங்கி ஊழியர்...' ஏன் இப்படி வந்தாரு...? - அதிகாரிகள் சொன்ன காரணம்...!
- 'வக்கீலுக்கு ஃபீஸ் கொடுக்க...' 'கையில சுத்தமா காசு இல்லங்க...' - இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விஜய் மல்லையா...!
- 'பேங்க்ல ரூ.13,500 கோடி கடன் வாங்கிட்டு...' மோசடி செய்த 'இந்த நபர்' யார் தெரியுமா...? - இப்போ 'இந்த' நாட்டுல தான் பதுங்கி இருக்காராம்...!
- கொரோனா வந்து ஹாஸ்பிட்டல்ல 'அட்மிட்' ஆனீங்கன்னா 2.50 லட்சம் ரூபாய் தருவோம்...! - தங்கள் ஊழியர்களுக்கு பல 'சலுகைகளை' அள்ளி வழங்கிய பிரபல வங்கி...!