‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி’!.. விபரீத முடிவெடுத்த கணவர்.. சிக்கிய உருக்கமான கடிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சி அருகே மனைவி கோபத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் மிட்டாய்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த தாமினி (25) என்பவருடன் பிரபுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 மாத ஆண்குழந்தை ஒன்றுள்ளது. இந்த நிலையில் மிட்டாய்கடையில் சரியாக வருமானம் வராததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கோபமடைந்த தாமினி குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து பலமுறை மனைவியை வீட்டுக்கு வருமாறு பிரபு அழைத்துள்ளார். ஆனால் பிரபுடன் வர தாமினி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனைமுடைந்த பிரபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே பிரபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் பிரபு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பிரபுவின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபு எழுதியதாக 3 பக்க கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், ‘திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே பெண் வீட்டார் மூலம் என் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் வந்தன. இருப்பினும் நாங்கள் பொறுத்து கொண்டோம். இதற்கு என் ஊர் மக்களே சாட்சி. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதனால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் கோழை இல்ல. அப்பாவி ஆண்களுக்கு எதிரான பெண் வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம்’ என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபுவின் மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி, அவரது தங்கை தனலெட்சுமி உள்பட 7 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கருணாநிதியையும், தனலெட்சுமியையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மனைவி பெற்றோர் வீட்டுக்கு கோபித்து சென்றதால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்