‘லலிதா ஜுவல்லரி கொள்ளையில்’.. ‘சரணடைந்த முக்கிய குற்றவாளி’.. ‘11 கிலோ நகைகள் மீட்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் 11 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த 2ஆம் தேதி சுவரில் துளையிட்டு 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 7 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடிய போலீஸார் மணிகண்டன் என்பவரை 3ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் கொள்ளையில் தொடர்புடைய  மற்றொரு குற்றவாளியான சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் கொள்ளையர்களுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த முருகன் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி திருவெறும்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீஸார் மீட்டுள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து அந்த நகைகளை பெரம்பலூர் போலீஸார் மீட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

TRICHY, LALITHA, JEWELLERY, ROBBERY, THEFT, GOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்