‘கரை ஒதுங்கிய இன்ஜினியரிங் மாணவர் உடல்’.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட இன்ஜினியரிங் மாணவரின் உடல் பனையபுரம் அருகே கரை ஒதுங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகன் ஜீவித்குமார் (20). இவர் திருச்சி அண்ணா பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் பெண் தோழி ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த போதைக் கும்பல் ஒன்று ஜீவித்தின் தோழியை கிண்டல் செய்து பாலியல் ரீதியலாக அத்துமீற முயன்றுள்ளன்ர்.

இதை தடுக்க முயன்ற ஜீவித்தை தாக்கிய அக்கும்பல், கொள்ளிடம் ஆற்றில் அவரை தூக்கி வீசியுள்ளது. அந்த சமயம் போதை கும்பலிடம் தப்பிய அப்பெண் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு குழுவினருடன் இணைந்து ஜீவித்தை தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று பனையபுரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஜீவித்தின் உடலை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கலையரசன், கோகுல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜீவித் தனது தோழியுடன் இருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி, அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளனர். இதில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

CRIME, COLLEGESTUDENT, TRICHY, RIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்