தொடர்ந்து ‘வற்புறுத்தி’ வந்த ‘பெற்றோர்’... மருத்துவமனையிலேயே ‘டாக்டர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி தனியார் மருத்துவமனையில் மயக்க ஊசி போட்டு மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவராக வேலை செய்துவந்துள்ளார். சரவணன் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்துவந்த நிலையில், அவருடைய பெற்றோர் தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த சரவணன் 4வது தளத்திலுள்ள ஒரு அறைக்குச் சென்று தனக்குத் தானே கையில் மயக்க ஊசி போட்டுக்கொண்டுள்ளார். அளவுக்கு அதிகமாக மயக்க மருத்தை உடலில் செலுத்தியதால் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவர் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சரவணனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கணவன் வருவது கூட அறியாமல்"... "செல்போனில் மூழ்கிக்கிடந்த மனைவி!"... "ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்!"...
- ‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..!
- ‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!
- வீடு திரும்பாததால் ‘தேடி’ சென்ற தாய்... எதிரே ‘அலறியபடி’ ஓடிவந்த ‘10 வயது’ மகன்... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- ‘வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்’.. ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்..!
- “வரவேற்பு நிகழ்ச்சியில் வந்த வேற லெவல் சோதனை!”.. “போர்க்களமான திருமண மண்டபம்!”
- ‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...
- ‘காதலை’ முறித்துக்கொண்ட ‘அக்கா’... வாட்ஸ்அப்பில் வந்த ‘புகைப்படம்’... தங்கைக்கு ‘ஷாக்’ கொடுத்த ‘கோவை’ இளைஞர்...
- ‘வாயில்’ கேஸ் சிலிண்டர் ‘டியூப்’... முகத்தில் ‘பிளாஸ்டிக்’ பை... ‘நீண்ட’ நாள் பிரச்சனையால்...‘சென்னை’ இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- "செல்போனுக்காக சண்டையிட்ட நண்பர்கள்!"... "கொலையில் முடிந்த கொடூரம்"... "திருச்சியில் பரபரப்பு"...