'நெஞ்சை சுக்குநூறாக்கிய அப்பாவின் திடீர் மரணம்'... 'என் கல்யாணத்துக்கு அப்பா இருக்கணும்'... 'நெகிழ வைத்த ஆசை மகள்'... ஆனந்த கண்ணீரோடு நடந்த திருமணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மகள்களுக்கு அப்பா மீதும், அப்பாக்களுக்கு மகள் மீதும் எப்போதும் தனி பாசம் உண்டு. தனக்கு வரும் கணவன் கூட தனது அப்பா போல என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பெண்களின் முதல் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படி பாசத்தைக் கொட்டி வைத்திருக்கும் அப்பாவின் மறைவு என்பதை எந்த மகள்களாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநர். இவருடைய மனைவி மல்லிகா. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவு திடீரென இறந்து போனார்.

ராஜேந்திரனின் மறைவு ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக மல்லிகாவின் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கு மீளாத் துயரத்தைக் கொடுத்தது. இந்நிலையில் மல்லிகாவின் மூத்த மகள் ஜெயலட்சுமிக்கும், மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் கீர்த்திவாசனுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் இவர்களது திருமணத்தைத் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரெயில்வே மண்டபத்தில் நடந்த முடிவு செய்யப்பட்டது.

அதே நேரத்தில் தனது ஆசை அப்பா தன்னுடைய திருமணத்தில் இல்லையே என ஜெயலட்சுமி ஏக்கத்தில் இருந்துள்ளார். தனது அப்பா திருமணத்திலிருந்து என்னை ஆசிர்வதித்து இருந்தால் நான் எவ்வளவு சந்தோசப்படுவேன் எனத் தனது குடும்பத்தினரிடம் அவ்வப்போது சொல்லி வந்துள்ளார்.

இதையடுத்து ஜெயலட்சுமியின் குறையைப் போக்க நினைத்த அவரது குடும்பத்தினர், ரூ.3 லட்சம் செலவில் ராஜேந்திரனின் மெழுகு சிலையைத் தயாரிக்கப் பெங்களூருவில் ஆர்டர் கொடுத்தனர். ராஜேந்திரன் பேண்ட், சட்டை அணிந்து அமர்ந்து இருப்பது போல் மெழுகு சிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டது. இந்த சிலையைப் புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது.

அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற ஜெயலட்சுமி தந்தையின் மெழுகு சிலையைப் பார்த்துக் கண்ணீர்விட்டார். இதனால் மகிழ்ச்சியிலிருந்த மொத்த திருமண வீடும் நெகிழ்ச்சியில் கண்ணீர் வடித்தார்கள். தந்தையின் மீது இவ்வளவு பாசமா என வியந்து போன உறவினர்கள், மணமக்களை ஆனந்தக் கண்ணீரோடு வாழ்த்திச் சென்றார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்