'சென்னையில் நிலநடுக்கம்?'... 'யாரும் பயப்படாதீங்க'... 'தமிழ்நாடு வெதர்மேன்' வெளியிட்ட முக்கிய பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று மதியம் சரியாக 12.35 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 296 கிமீ தூரத்தில் சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக இந்த நில அதிர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சென்னையிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அது குறித்த அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், ''மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. சென்னையிலிருந்து மிகத் தொலைவில் தான் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்பில் வரும் எந்த தகவலையும் நம்ப வேண்டாம்.அதே போன்று சுனாமி குறித்த எந்த அச்சமும் தேவையில்லை. இது போன்ற ஒரு சிறிய அதிர்வு 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உணரப்பட்டது. எனவே மக்கள் பீதி அடையத் தேவையில்லை'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்