"மாப்ள அரைப்பாடி லாரியை புடிச்சாவது ஊரு வந்து சேரு..." "அதான் நேத்தே கைத்தட்டி கொரோனாவ விரட்டியாச்சே..." 'கோயம்பேட்டில்' குவிந்த 'திருவிழாக் 'கூட்டம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 31ந்தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அத்தியாவசிய துறைகள் தவிர்த்து மற்ற அலுவலங்கள் இயங்காது என்றும் அறிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ந்தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும மூட வேண்டும். இந்த 144 தடையால் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்றே சென்னையிலிருந்து அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட வேண்டும் என்கிற ஆவலில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர். பேருந்தில் இடம் கிடைக்காமல் பலரும் நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு இல்லாமல் இப்படி ஒரே இடத்தில் பலர் கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என மருத்தவர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

CORONA, CHENNAI, KOYAMBEDU, TRAVELLERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்