'தமிழ்த்தாய் வாழ்த்து சொல்லிட்டா நீங்க கிளம்பலாம்...' 'தெரியாமல் திருதிருவென முழித்த இளைஞர்கள்...' ஊரடங்கை மீறுவோருக்கு நூதன எச்சரிக்கை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவை மீறுவோரை போலீசார் பல புதுவிதமான வகையில் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இந்தியா வரும் ஏப்ரல் 14 தேதி வரை 144 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை அடுத்து தமிழகத்திலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தான் மக்கள் வெளியே வர அனுமதித்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் பொது மக்களில் சிலர் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் வேடிக்கைக்காக வெளியே சுற்றிவருகின்றன.
இதே போல் நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு காவல்துறையினர் நிறுத்தி, ஏதாவது ஒரு திருக்குறளை கூறிவிட்டு இங்கிருந்து செல்லலாம் என தெரிவித்துள்ளனர். திருக்குறள் தெரிந்தவர்கள் திருக்குறளை சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மேலும் தெருவில் சுற்றும் இளைஞர்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்து கூற சொல்லியுள்ளார் உதவி ஆய்வாளர் மகேஷ். தமிழ்த்தாய் வாழ்த்து சொல்ல தெரியாமல் திருதிருவென முழித்துக்கொண்டு தவித்த பலரின் வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சில இடங்களில் போலீசார் வாகனங்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இது போன்று விதிமுறைகளை மீறி வருபவர்களை எப்படியாவது காவல்துறை தடுத்துவிட வேண்டும் என இதுபோன்று பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எங்க பசியாத்த யாரும் வரமாட்டாங்களான்னு நெனச்சேன்’.. ‘கண் கலங்கிய முதியவர்’.. ஊரடங்கில் உருகவைத்த இளைஞர்கள்..!
- ‘புள்ள பெத்துக்கவே 10 மாசம் ஆகுது’.. 20 நாள் வீட்ல இருக்க முடியாதா?.. ‘எங்களுக்காக இத மட்டும் பண்ணுங்க’.. தூய்மை பணியாளர்கள் உருக்கமான வேண்டுகோள்..!
- 'வெளிநாட்டுல' இருந்து 'காப்பாத்துங்கன்னு' சொன்னவங்க எல்லாம்... இப்போ 'ஊட்டிக்கு டூர்' வந்த மாதிரி 'சுத்துறாங்க'... 'பொறுத்து பொறுத்துப்' பார்த்த 'போலீஸ்' செய்த 'காரியம்'...
- ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே திரிந்த மக்கள்.. தண்ணீரை பீய்ச்சி விரட்டிய அதிகாரிகள்..!
- ‘21 நாட்கள்’ ஊரடங்கால்... பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் ‘சேவை’ நிறுத்தமா?... ‘விவரங்கள்’ உள்ளே...
- "அடங்கவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு தான்..." "வேற வழியில்லை..." "பெட்ரோல் பங்கையும் மூடிருவோம்..." 'எச்சரிக்கை' விடுத்த 'முதலமைச்சர்' யார் 'தெரியுமா?...'
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!
- ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு!... காவல்துறை அதிரடி!
- ‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'!
- 'எவ்வளவோ கெஞ்சினோம்.. ஆனா விடல'.. '6 கி.மீ நடந்தே போய்'.. கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்!