"எனக்கும் ஆச தான்.. ஆனா நிஜத்துல".. கண் கலங்கிய திருநங்கை வைஷுவின் உருக்கமான பேச்சு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த மே 8 ஆம் தேதியன்று, அன்னையர் தினம் உலக முழுவதும் கொண்டாடப்பட்டிருந்தது. இந்த நாளில், உலகிலுள்ள அனைவரும், தங்களை பத்து மாதங்கள் கஷ்டப்பட்டு ஈன்று எடுத்த தாய்க்காக, தங்களாலான பரிசுகளையோ அல்லது அன்பினையோ வெளிப்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Advertising
>
Advertising

அதே நாளில், 'மொட்டை சிவா கெட்ட சிவா' உள்ளிட்ட சில திரைப்படங்களில் தோன்றி இருந்த திருநங்கையான வைஷு, குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற ஒரு வீடியோ ஷூட் நடத்தி, பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.

முதலில் இருந்த தயக்கம்

இந்நிலையில், Behindwoods நேர்காணல் நிகழ்ச்சியிலும் திருநங்கை வைஷு கலந்து கொண்டு பேசி இருந்தார். அன்னையர் தினத்தில் நடந்த போட்டோஷூட் பற்றி பேசி இருந்த வைஷு, முதலில் அரை நிர்வாணத்தில் போஸ் கொடுக்க சற்று தயங்கி இருந்ததாகவும், பின்னர் மக்கள் எப்படி தன்னுடைய திறனை எடுத்துக் கொள்வார்களோ என்ற குழப்பமும் இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது மட்டும் நடக்குறதில்ல..

கடைசியில், குழந்தை பால் ஊட்டுவது போல தான் நின்ற பிறகே, தனக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறந்ததாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய வைஷு, "திருநங்கை சமூகத்தில் நிறைய பேருக்கு திருமணம் உள்ளிட்ட நிறைய விஷயங்கள் நடந்து வருகிறது. ஆனால், குழந்தை பெற்றுக் கொள்வது என்பது இயலாத காரியம். நிறைய பெண்களுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு ஒன்றே  ஒன்றை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன்.

எனக்கும் ஆச இருக்கு..

ஊர் மக்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நீங்கள் மனம் தளராமல் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருங்கள். எங்களை மாதிரி திருநங்கைகள் நிறைய பேர் காதலிப்பார்கள். அப்படி என்னுடைய வாழ்க்கையில் என்னை நிறைய ஆண்கள் ஏமாற்றவும் செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், உங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என கூறி தவிர்க்கும் போதும், எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.

அனைத்து பெண்களுக்குமே குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கும் தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், திருநங்கைகளான எங்களை ஆண்கள் நிறைய பேர் ஒதுக்குவதற்கான காரணம், குழந்தையை எங்களால் பெற முடியாது என்பதால் தான்" என கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

TRANSGENDER, VAISHU, MOTHERS DAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்