"ஆந்திரா 'செல்ஃபோன்' திருட்டு 'ட்ரெயினிங் சென்டர்ல' தான் கத்துக்கிட்டோம்..." என்னவோ 'ஆக்ஃபோர்டு' யூனிவர்சிட்டில 'பி.ஹெச்.டி'. படிச்ச மாதிரி... பெருமையாக 'வாக்குமூலம்' கொடுத்த 'திருடர்கள்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஆந்திராவில் திருடுவதற்காக தாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டதாக கூறியது போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது.

சென்னை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பகுத்களில் செல்ஃபோன் திருட்டு சம்பந்தமாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து அப்பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும் பயணிகளின் சட்டைப் பையில் இருந்து செல்ஃபோனை திருடும்போது 2 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களுடன் வந்தமற்ற இருவர் தப்பியோடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் இருந்து 11 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கடேசன், தமிழ்குமார் என அடையாளம் தெரியவந்தது. மேலும் வார இறுதி நாட்களில் அவர்கள் தொடர் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு கோதாவரி, ஹக்கிவீடு போன்ற பகுதிகளில் செல்ஃபோன்களை திருடுவதற்கு என பயிற்சி பெற்று 2016-ஆம் ஆண்டு முதல் அவர்கள் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

CHENNAI, THAMBARAM, CELLPHONE, SNATCHERS, ARREST, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்