சென்னை ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட்.. ரிசர்வேஷனில் ஏறிய பெண்.. நள்ளிரவில் பொது பெட்டிக்கு மாறிய போது விபரீதம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற கணவனை சந்திக்க சென்றபோது இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

Advertising
>
Advertising

சென்னை கிண்டியை சேர்ந்தவர் சர்மிளா. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் தனது கணவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக  இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சர்மிளா தனது 10 மற்றும் 6 வயது கொண்ட இரண்டு மகன்களுடன் கிண்டியில் உள்ள தனது தாய், தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கணவரோடு சேர்ந்து வாழ எண்ணினார் சர்மிளா. அவரது கணவர் திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.

அவரை சமாதானப்படுத்த கடந்த 8-ம் தேதி இரவு ஷர்மிளா, சென்னை எழும்பூரிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் பயணம் செய்தார்.  இவரது டிக்கெட் வெயிட்டிங்கில் இருந்த நிலையில் இவர் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளார். இதன் பின்னர்,   டி.டி.ஆர் டிக்கெட் பரிசோதனை செய்தபோது இவரது டிக்கெட் வெயிட்டிங்கில் இருப்பது தெரியவந்தது. இதனால்,  ஷர்மிளாவை டி.டி.ஆர் பொது பயணப் பெட்டிக்கு செல்ல கூறியுள்ளார். தான் புக் செய்ததாகவும் ஆனால் தனக்கு இருக்கை கிடைக்கவில்லை என்றும் மேலும்  பணம் தருவதாகவும் சர்மிளா டி.டி ஆர்., இடம் கூறியுள்ளார்.

இங்கு இருக்கை எதுவும் இல்லை எனக் கூறிய டிடிஆர் சர்மிளாவை பொதுப்பெட்டிக்கு செல்லுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.  இதனால் இரவு நேரத்தில் தூக்க கலக்கத்தில் இருந்த சர்மிளா மேல்மருவத்தூர் நிறுத்தத்தில் இறங்கி பொது பயணப்பெட்டிக்கு மாறும் போது எதிர்பாராதவிதமாக பிளாட்பார்முக்கும் - ரயிலுக்கும் இடையில் மாட்டிக் கொள்ள, ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த விபத்தில் சர்மிளாவின் இடது கால் மற்றும் இடது கை துண்டானது. அக்கம்பக்கத்தினர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சர்மிளாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில், சர்மிளா அனுமதிக்கப்பட்டார். இடது கால் மற்றும் இடது கை துண்டான நிலையில், வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார். இதனால் மன வேதனையடைந்த சர்மிளா வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில், "டிக்கெட் பரிசோதகர் என்னை திட்டியதால், தூக்க கலக்கத்தில், சென்றதால் தனக்கு விபத்து ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

கை,கால்களை இழந்ததோடு, தனது இரு குழந்தைகளையும் தன்னையும் காக்க அரசு உதவ வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கூறினார். இதனைத்தொடர்ந்து, இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

CHENNAI, SHARMILA, TTR, VIRALVIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்