இன்ஸ்டாவில் அடிக்கடி ஷேர் ஆன போட்டோ .. ப்ரண்ட்ஸ் சொன்ன தகவல்.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

செங்கல்பட்டு:  பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

Advertising
>
Advertising


இன்ஸ்டாகிராம் தளத்தில் இளைஞர்களுக்கு பாதுகாப்பாக அமைக்க புதிய வசதி விரைவில் வரும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என எல்லோரும் தங்களுக்குபிடித்த பாடலை ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர். டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்தவகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவேற்றம் செய்த பெண்ணுக்கு இப்படி ஒரு சோதனை நிகழலாமா என்று பலரும் வேதனையடைந்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் செய்யும் சுட்டி தனங்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்வது வழக்கம். அதேபோன்று தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்துள்ளார். இந்நிலையில், பெயர் முகம் தெரியாத நபர் ஒருவர் அவரது பெயரில் போலியான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அக்கவுண்டை கிரியேட் செய்து அவரது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் .
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் இந்த விவரம் தெரிய வந்ததும் அந்தப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் "தனது Instagram- ல் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக சித்தரித்து யாரோ மர்ம நபர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்துள்ளார்" என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்  உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்  சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர்  தனசேகரன் ஆகியோர் தீவிர விசாரனை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட முனீஷ்வரன் (33) என்பவரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்தப்பெண்ணின் புகைப்படத்தை இன்டர்நெட் மூலம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து முனீஸ்வரன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என போலீசார் சார்பில் கேட்டுகொண்டனர்.

CHENGALPATTU, INSTAGRAM, CYBER CRIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்