ஏன்பா வாயில்லா ஜீவனை அடிக்கலாமா... தட்டி கேட்ட முதியவர்... அந்த நபர் செய்த செயல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: சோழிங்கநல்லூரில் தெருநாய்களை அடித்து துன்புறுத்திய நபர் ஒரருவர் தட்டி கேட்ட முதியவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

வழக்கமாக கடைகள் திறந்து இருக்கும் போது மீதியாகும் உணவு பொருட்கள் வெளியே கொட்டப்படும். இதனை தெருநாய்கள் சாப்பிடும். ஆனால், முழு ஊரடங்கால் இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் உள்ளது. இதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காமல் பசியுடன் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்நிலையில், தெருநாய்களுக்கு உணவு வழங்கி வரும் முதியவருக்கு நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சோழிங்கநல்லூர் அடுத்த சிறுச்சேரி பகுதியை சேர்ந்தவர் மஹாவீர் ஜெயின்(56). தொழிலதிபதிரான இவர் தனது ஓய்வு காலத்தை குடும்பத்தோடும், கால்நடைகளை பராமரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். செல்லப் பிராணிகளுடன் அன்புடன் இருக்கிறார்.

கொரோனா முதல் அலை அறிவித்தது முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக  சிறுசேரி எல் அண்டு டி, ஈடன் பார்க் ஃபேஸ் 1 அடுக்கு மாடி குடியிருப்பில் மஹாவீர் ஜெயின் குடும்பத்தோடு வசித்து வருகிறார். காலை நேரத்தில் வெளியே நடைபாதை செல்லும் நேரத்தில் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவது வழக்கம்.

நாகை விசிக பிரமுகர் இறப்பில் அவிழ்ந்த மர்மம்.. மாமியார் கைது.. மனைவியும் கைது.‌. நடந்தது என்ன?

அதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து விட்டு தனது நண்பருடன் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது செல்லும் வழியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் தெருநாய்களை கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடந்த முதியவர் ராஜேஷை கண்டித்துள்ளார்.

இருப்பினும் முதியவர் என்றும் பாராமல் ராஜேஷ் மஹாவீர் ஜெயினை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்பு, நாய்களை அடித்த கட்டையால் அவரையும், அவரது நண்பரையும் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மஹாவீர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறு காயம் என்பதால் உயிர் தப்பினார்.

ஓடி வாங்க.. கதவ உள்பக்கமா சாத்திட்டாரு.. உடைச்சு உள்ள போனப்போ போலீசார் கண்ட காட்சி.. என்ன நடந்தது?

இதனையடுத்து, காயமடைந்த மஹாவீர் ஜெயின் இச்சம்பவம் குறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

OLD MAN, STRAY DOGS, CHENNAI, ELDERLY MAN, முதியவர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்