ஏன் அவசியம் இல்லாம வெளிய வரீங்க...? 'நாம இத அலட்சியமா நினைக்க கூடாது...' 'இதெல்லாம் ஒருநாள் மட்டும் இல்ல...' விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து காவலர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்போக்குவரத்து காவல் துறை அதிகாரி கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக செய்த செயல் அனைவரையும் வெகுவாக கவர்ந்து சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர சுய ஊரடங்கை பின்பற்றுமாறு பிரதமர் மோதி அவர்களும், தமிழக அரசும் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சுய ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்ட து.
இதனால் தஞ்சாவூர் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன. நேற்று ஆற்றுப்பாலம் டிராஃபிக் சிக்னல் அருகே பணியில் இருந்த போக்குவரத்து காவலர் குணசேகரன் அங்கு முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பலர் சென்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய குணசேகரன் `ஏன் நீங்கள் மாஸ்க் அணியவில்லை... இப்பொழுது தமிழகம் எங்கும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுப்பதும், நம்மை பாதுகாத்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாம் அனைவருக்கும் எப்பொழுதும் வேண்டுமானாலும் கொரோனா வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது. அதற்காகவே இந்த சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
நாம் இதை அலட்சியமாக நினைக்காமல் இதன் அவசியத்தை உணர்ந்து நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். எனவே முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியே வாருங்கள். அவசியம் இல்லாமல் வெளியே வராதீர்கள். அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். முகக்கவசம் அணிவது நமக்கு மட்டும் இல்லை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதுகாப்பானது. இதெல்லாம் ஒருநாள் மட்டும்தான் என்று நினைக்காதீங்க, கொரோனா கட்டுக்குள் வரும் வரை இதைச் செய்யுங்கள்" என கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் நாம் பயணிக்கும் போது நம்முடன் சானிடைஸர் எடுத்து செல்ல வேண்டும். நாம் தெரியாமல் எங்காவது கை வைத்துவிட்டால் அதன் மூலமும் நமக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகளின் கையில் ஸ்பிரே செய்வதுடன் இதைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தன்னுடைய கடமையை செய்தார் போக்குவரத்து காவலர் குணசேகரன்.
இவரின் இந்த அன்பான வேண்டுகோளுக்கிணங்க அப்பகுதியினர் அவரின் அறிவுரைகளை பின்பற்றி வருகின்றனர். மேலும் அவரது இந்த அன்பான அணுகுமுறையை பலரும் பாராட்டி விட்டுச் சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வைரஸ் காற்றில் பரவாது'... 'மருத்துவர்கள்' வெளியிட்ட 'ஆறுதலான' தகவல்... இந்திய 'மருத்துவ' ஆராய்ச்சி 'கவுன்சில்' 'அதிகாரப்பூர்வ' அறிவிப்பு...
- கைகொடுக்கும் 'பாரம்பரிய' மருத்துவம்... 'கொரோனாவைத்' தடுக்க 'கபசுர' குடிநீர்... 'சித்த' மருத்துவமனைகளில் 'இலவசம்'...
- 'கொரோனா' பீதி நமக்குத்தான்... 'செல்லப் பிராணிகளுக்கு' இல்லை... 'நாய்க்குட்டியை' இப்படியும் 'வாக்கிங்' கூட்டிச் செல்லலாம்... 'இளைஞர்' வெளியிட்ட 'வைரல் வீடியோ'...
- ’கொரோனாவை’ வில்லனாக பாவித்து...’ ’தெறிக்கவிடும்’ ’பாடல்களுடன்’... ’கேரளா’ வெளியிட்ட ’விழிப்புணர்வு வீடியோ’...
- 'ரயிலில்' போலீசாரை பார்த்ததும் 'பதுங்கிய' இருவர்... 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்கள் என 'தெரிந்ததும்'... 'பதறிப்' போன 'பயணிகள்'...
- 'கொரோனாவை' கொல்லும் சிறந்த 'மருந்து' இதுதான்... இந்த மருந்தை 'உடனடியாக' பயன்படுத்துங்கள்... 'வெளிப்படையாக' அறிவித்த 'டொனால்ட் டிரம்ப்'...
- 'சொந்த' ஊர்களுக்கு 'படையெடுக்கும்' 'சென்னை' மக்கள்... 'கோயம்பேட்டில்' அலைமோதும் 'கூட்டம்'... உயர்த்தப்பட்ட 'ஆம்னி' பேருந்துகளின் 'கட்டணம்'...
- '10 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்...' ஒரு மணி நேரத்தில் '50 பேர்' பாதிப்பு... 'பொருளாதாரத் தடை'யால் மருத்துவ 'உபகரணங்கள்' இன்றி தவிக்கும் 'ஈரான்'...
- 'இத்தாலியை' புரட்டிப் போட்ட 'கொரோனா'...பலி எண்ணிக்கையில் 'சீனாவை' 'மிஞ்சியது'...'உலகப் போரை' விட 'மோசமான' நிலை...
- என்ன ஒரு 'தீர்க்கதரிசனம்.!..' 'இன்னைக்கு' நடக்கிறத 'அப்படியே' எடுத்திருக்காரு...'ஹாலிவுட்டில்' ஒரு 'நாஸ்ட்ரடேமஸ்'...