“கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை, பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் டிராஃபிக் காவலர் ஒருவர் இந்த ஊரடங்கு சூழலிலும் வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றித் திரியும் வாகன ஓட்டிகளிடம் கெஞ்சி பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வாகன ஓட்டிகளிடம் பேசும் அந்த டிராஃபிக் காவலர் கையெடுத்துக் கும்பிட்டபடி, “தயவு செய்து வீட்ல இருங்க. வெளிய வராதீங்க. உங்க பாதத்த தொட்டு, கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன். ப்ளீஸ்... தற்செயலா வந்துட்டீங்க. சீரியஸ்சஸ புரிஞ்சுக்கங்க. கால தொட்டு கும்பிட்டு கேட்டுக்குறேன். இவ்வளவு பேர் வந்தா எப்படிங்க நோயை கட்டுப்படுத்த முடியும்” என்று பேசுகிறார்.
மேலும் சில வாகன ஓட்டிகளிடம் பேசிய இந்த டிராஃபிக் காவலர், “தயவு செய்து வெளிய வராதீங்க. உங்க காலத் தொட்டு கெஞ்சு கதறி கேக்குறேன். வராதீங்க. ஒவ்வொரு தனி மனிதனும் விழிப்போட இருந்தாதான் நோயை குறைக்க முடியும். நம்ம நாட்டுக்காக, நமக்காக, நமக்காக வீட்டுக்கா சொல்றேன். இத விட சொல்றதுக்கு எனக்கு வார்த்தையே இல்ல. வீட்லயே இருங்க” என்று கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா வந்துடுச்சுனா!’.. ‘காலி செய்ய சொன்னதால் நடுரோட்டில் மருத்துவர்கள்!’.. ‘வீட்டு உரிமையாளர்கள்’ மீது அமித் ஷா ‘அதிரடி’ நடவடிக்கை!
- ‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!
- “கோயில்கள் மூடப்பட்டாலும்.. தெய்வங்கள் எல்லாம் மருத்துவமனையில்!”.. மருத்துவ ஊழியர்களுக்கு தமிழக அரசு ‘சிறப்பு’ அறிவிப்பு!
- 23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!
- ‘லாரியில் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 பேர்’.. போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. வேலூரில் பரபரப்பு..!
- “இதுக்காகவே அவரை பாராட்டணும்”.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றி ஜெயம் ரவி ட்வீட்!
- ‘மூடப்படும் எல்லைகள் .. சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு லாக்டவுன்’.. 'ஊரடங்கு உத்தரவை மீறினா கடுமையான ஆக்ஷன்'!
- ‘தற்காலிகமாக சேவையை துண்டித்த’ .. ‘பிரபல கேப் நிறுவனம்!’.. கொரோனா லாக்டவுன் எதிரொலி!
- ‘நள்ளிரவு முதல் பயணிகள் ரயில் சேவை நிறுத்தம்!’.. ‘மெயில், எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் நாளை காலை நிறுத்தம்!’.. விரிவான விபரங்கள் உள்ளே!